#EURO2020 யூரோ கோப்பை: 4-வது முறையாக இறுதிப்போட்டிக்கு இத்தாலி தகுதி: பெனால்டிசூட்டில் ஸ்பெயின் தோல்வி

By செய்திப்பிரிவு


யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு 4-வது முறையாக இத்தாலி அணி தகுதி பெற்றுள்ளது.

கடந்த 1968ம் ஆண்டுக்குப்பின் சாம்பியன் பட்டம் பெற கடும் போராட்டம் நடத்திவரும் இத்தாலி அணி இறுதிப்போட்டியில் வென்றால், ஏறக்குறைய அரைநூற்றாண்டுக்குப்பின் அதாவது 53 ஆண்டுகளுக்குப்பின் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்துக்கு இடையே நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை 4-2 என்ற கோல் கணக்கில் பெனால்டி சூட் முறையில் இத்தாலி வென்றது.
இதற்கு முன் கடந்த 2000, 2012ம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இத்தாலி அணி. ஆனால், 2000ம் ஆண்டில் பிரான்ஸிடமும், 2012ம் ஆண்டு ஸ்பெயினிடமும் தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் சென்றது.

பெனால்டிசூட்டில் கடைசி கோலை அடித்த இத்தாலி வீரர் ஜோர்ஹின்னோ

ஜெர்மனி அணிதான் அதிகபட்சக 6 முறை இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது, அதற்கு அடுத்தார்போல் இத்தாலி, ஸ்பெயின் அணிகள் 4 முறை பைனல் சென்றுள்ளன.

அரையிறுதிப் போட்டியில் இத்தாலி, ஸ்பெயின் இரு அணிகளும் பெனால்டி சூட் முறையில் ஆட்டத்தின் முடிவை தெரிந்து கொள்வது இது 6-வது முறையாகும். இதில் இத்தாலி அணிதான் 3 முறை வென்றுள்ளது, ஸ்பெயின் 2 முறை மட்டுமே வென்றுள்ளது.

இத்தாலி அணி யூரோ கோப்பைக்குத் தகுதி பெற்றது முதல் இதுவரை 33 ஆட்டங்களாக தோல்வி அடையாமல் பயணித்துவருவது யூரோ வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

ஆட்டத்தை இத்தாலி அணி சுறுசுறுப்பாகத் தொடங்கினாலும், ஸ்பெயின் அணி மிட் ஃபீல்டில் இத்தாலி அணிக்கு கடிவாளம் போட்டு நிறுத்தியது. ஆனால், 25 நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் டேனி ஒல்மோவுக்கு கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்ற ரீதியில் விளையாடியதால் கோல் இன்றி முதல்பாதி முடிந்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கியதிலிருந்து கோல் அடிக்க இரு அணி வீரர்களும் கடும் பிரயத்தனம் செய்தனர். சிரோ இமொபைல், செர்ஜியோ பஸ்குட்ஸ் இருவரும் பந்தை கடத்தி கோல் அடிக்கக் கொண்டு சென்றநிலையில் அதை சிமன் தடுத்துவிட்டார்.

ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் இத்தாலி வீரர் சீஸா, அனைத்து வீரர்களுக்கும் போக்குகாட்டி பந்தை லாவகமாகக் கடத்தி வந்து கோல் அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலைப்படுத்தினார்.

இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் மாற்றுவீரராக களமிறங்கிய ஸ்பெயின் வீரர் மொராட்டோ கோல் அடிக்க இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தன. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் இருந்ததையடுத்து, போட்டி சமனில் முடிந்தது.

ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய இத்தாலி கோல்கீப்பர் டோனருமா.

இதையடுத்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அந்த கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பெனால்டி சூட் முறையில் ஆட்டத்தின் முடிவு தெரிய முடிவு செய்யப்பட்டது.
முதலில் இத்தாலி வீரர் லொகாடெலியும், ஸ்பெயின் வீரர் ஒல்மோவும் பெனால்டி சூட் அடித்தனர், இருவரும் கோலாக மாற்ற முடியவில்லை. 2-வது வாய்ப்பில் இத்தாலிக்கு பெலோட்டியும், ஸ்பெயின் அணிக்குஜெரார்டும் கோல் அடிக்க 1-1 என்ற சமனுக்கு வந்தது.

3-வது வாய்ப்பில் இத்தாலி வீரர் போனுஸி கோல் அடிக்க, ஸ்பெயின் அணிக்கு தியாகியோ கோல் அடித்ததால், 2-2 என்ற பரபரப்பான சூழல் நிலவியது. 4-வது வாய்ப்பில் இத்தாலி வீரர் பெமார்டேஸி கோல் அடித்தார். ஆனால், ஸ்பெயின் வீரர் மொரோட்டோ அடித்த கோலை இத்தாலி கோல் கீப்பர் ஜியான்லுகி டோனாருமா தடுக்கவே இத்தாலி அணி 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. கோல்கீப்பர் டோனருமா கோலைத் தடுத்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். ஆட்டத்தின் நேரத்தில் கோல் அடித்த மொரோட்டோவால், பெனால்டி சூட்டில் கோல் அடிக்க முடியாமல் போனது வருத்தமாகும்.

5-வது வாய்ப்பில் இத்தாலி வீரர் ஜோர்ஹின்ஹோ கோல் அடிக்க 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது

6 மிகப்பெரிய போட்டித் தொடரில் அரையிறுதியில் தனது முதல் தோல்வியை ஸ்பெயின் அணி சந்தித்துள்ளது. இத்தாலி அணிக்காக இதுவரை ஜியான்லுகா பஃபான் 17 கோல்களை அடித்த நிலையில் அதை போனுஸி சமன் செய்துள்ளார்


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்