குவாஹாட்டியில் நடைபெற்று வரும் 12-வது தெற்காசிய விளை யாட்டுப்போட்டியில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த 19 வயதான தருண் அய்யாசாமி 400 மீட்டர் தடை தாண்டுதல் மற்றும் 4X400 தொடர் ஓட்டப்போட்டிகளில் பங்கேற்று 2 தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே ராவுத்தம்பாளையத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி கர்நாடக மாநிலம் மங்களூர் ஆல்வாஸ் பல்கலையில் பி.ஏ., மனிதவளம் மேம்பாடு படித்துவருகிறார். இவரது தங்கை சத்யா பள்ளி மாணவி. தாய் பூங்கொடி. தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
தருணின் 7 வயதிலேயே அவரது தந்தை இறந்துவிட்டார். ஏழ்மை நிலையில் பூங்கொடி தனது இரு குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்துள்ளார். தற்போது தருண் தெற்காசிய போட்டிகளில் இரு தங்க பதக்கம் வென்றுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள அவர், ‘தி இந்து’விடம் கூறியபோது, ‘‘கணவர் சிறுவயதிலேயே, புற்று நோயால் இறந்துவிட்டதால் இரு குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தேன்.
விளையாட்டில் ஆர்வம் கொண்ட தருண் ஓட்டப்போட்டி களில் பங்கேற்று தனது திறமையை வளர்த்துக்கொண்டான். அதற்கு குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணம்.
எனக்கு கிடைக்கும் மாதாந்திர குறைந்த வருவாயைக் கொண்டு தான், குடும்பம் நடத்த வேண்டிய நிலை. மாமனார் உட்பட மொத் தம் 4 பேரின் மாதாந்திர செல விற்கே, நான் வாங்கும் சம்பளம் போதாது. இதில், தருண் தடகளப் போட்டிகளில் பங்கேற்க சென்றால் அந்த மாதத்தில் சுமார் ரூ.15 ஆயிரம் கூடுதல் செலவாகும்.
இந்த சமயத்தில் எங்களுக்கு ஆதரவாக எனது தங்கை மோக னாவும், தம்பி பூபதியும் ஆதரவாக இருந்தனர். பயிற்சியாளர்கள் அழகேசன், சக்தி ஆகிய 2 பேரும் உதவிகள் செய்ததுடன் தருணின் திறமையை வளர்த்தனர்.
தெற்காசியப்போட்டியில் பங்கேற்று தருண் வெற்றி பெற் றதை தொலைக்காட்சியில் பார்த்த தருணத்தில் வாழ்க்கையில் இத்தனை நாள் பட்ட மனத் துயரம் நொடிப்பொழுதில் காணாமல் போனது. தொடர்ந்து, பல்வேறு சர்வதேசப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறுவதுடன், ஒலிம்பிக்கில் பங்கேற்று ஓடவேண்டும் என்பதே தருணின் கனவு. அது விரைவில் நிறைவேற பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன் என்று தருண் வென்ற தங்க பதக்கங்களை கையில் தாங்கியபடி பெருமிதம் பொங்க தெரிவித்தார் பூங்கொடி.
தருண் கூறும்போது, "ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதே எனது லட்சியம். இதற்காக துருக்கியில் நடைபெறும் முகாமில் பங்கேற்க செல்கிறேன். அங்கேயே ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான போட்டி யும் நடைபெறுகிறது. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago