இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவதற்கு இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. தரமான வேகப்பந்துவீச்சு இந்திய அணியிடம் இருக்கிறது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கணித்துள்ளார்.
இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் கிரிக் இன்ஃபோ தளத்தில் எழுதிய கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:
''உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்துவிட்டாலும் பரவாயில்லை. உலக அளவில் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணிகளின் பட்டியலில் இந்திய அணி சேர்ந்துவிட்டது.
ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள் அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் போல் இந்தியாவிலும் வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாகிவிட்டார்கள்.
ஆஸ்திரேலியாவில் தங்களின் வேகப்பந்துவீச்சு மூலம் டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிவரை முன்னேறியது. ஆதலால், இந்த முறை, இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வைத்தே வீழ்த்துவதற்கு இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
இந்திய அணியிடம் நல்ல தரமான வேகப்பந்துவீச்சு இருப்பது, வெற்றிக்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இந்திய அணியில் உள்ள முகமது ஷமி, இசாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் நிச்சயம் சவாலாக இருப்பார்கள்.
வேகப்பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியையும் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் வேகப்பந்துவீச்சில் மே.இ.தீவுகள் அணி எவ்வாறு சிறந்த அணியாக இருந்ததோ அதேபோன்று தற்போது நியூஸிலாந்து அணி திகழ்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதற்கு நியூஸிலாந்து அணி தகுதியானதுதான். அதற்கு அந்த அணியில் இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்கள் முக்கியக் காரணம். குறிப்பாக டிம் சவூதி, டிரன்ட் போல்ட், நீல் வேக்னர், கெயில் ஜேமிஸன் ஆகியோரின் பங்களிப்பு இறுதிப் போட்டியில் கூடுதலாக இருந்தது.
தற்போதுள்ள நியூஸிலாந்து அணியின் செயல்பாடு என்பது, கிளைவ் லாயுடு தலைமையிலான மே.இ.தீவுகள் அணியின் செயல்பாட்டைவிடச் சிறப்பாக இருக்கிறது. ஆன்டி ராபர்ட்ஸ், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர் ஆகியோருக்கு இணையாக வேகப்பந்துவீச்சுக் கூட்டணி நியூஸிலாந்து அணியிடம் இருக்கிறது.
நியூஸிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் குறிப்பிடப்பட வேண்டியவர் கெயில் ஜேமிஸன். எந்த ஆடுகளமாக இருந்தாலும் விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் 28 விக்கெட்டுகளை ஜேமிஸன் வீழ்த்தி பிரமிக்க வைக்கிறார். அனுபவரீதியாக சுவுதியின் வழிகாட்டல் பெரும் துணையாக இருந்துவருகிறது''.
இவ்வாறு இயான் சேப்பல் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago