25 ஆண்டுகளுக்குப்பின் யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதிபெற்றுள்ளது.
அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க் அணியுடன் மோதல் நடத்துகிறது இங்கிலாந்து அணி.
ரோம் நகரில் உள்ள ஸ்டேடியா ஒலிம்பி்க் மைதானத்தில் நேற்று நடந்த யூரோ கோப்பைப் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் உக்ரைன் அணியை 0-4 என்ற கோல் கணக்கில் நசுக்கி அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது
கடந்த 1996-ம் ஆண்டு கடைசியாக அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றிருந்தது.அதன்பின் 25 ஆண்டுகளுக்குப்பின் இப்போது அரையிறுதிக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் அபாரமாக இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். மேக்குர் மற்றும் மாற்று வீரராக களமிறங்கிய ஹென்டர்ஸன் தலா ஒரு கோல் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
வலிமையான இங்கிலாந்து அணியின் ஆட்டத்தின் முன் உக்ரைன் அணி வீரர்களின் ஆட்டம்எடுபடவில்லை. இங்கிலாந்து வீரர்களின் ஆர்ப்பரிப்பான, துள்ளலான பந்தை கடத்தும் போக்கு, தடுப்பாட்டம், போன்றவற்றின் முன் உக்ரைன் அணி மிகுந்த பலவீனமாகவே இருந்தது.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேனே கோல் அற்புதமான கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் படுத்தினார். அதன்பின் முதல்பாதிவரை இங்கிலாந்து அணியே முன்னிலைபெற்றிருந்து, உக்ரைன் அணி பதிலுக்கு கோல் அடிக்க முயற்சித்தும் முடியவில்லை.
இரண்டாவது பாதியி்ல், இங்கிலாந்து அணியின் ஆட்டம் மேலும் வேகமெடுத்தது. ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மெக்குர் அணிக்காக 2-வது கோல் அடித்து முன்னிலைப்படுத்தினார்.
2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னேறிச் செல்வதைப் பார்த்த உக்ரைன் வீரர்களுக்கு அழுத்தமும், நெருக்கடியும்அதிகரித்தது. இதனால், பந்தை பாஸ் செய்வதிலும், தடுப்பதிலும் தடுமாறினர். இதைப் பயன்படுத்திய இங்கிலாந்து கேப்டன் கானே, 50-வது நிமிடத்தில் தனது 2-வது கோலை அடித்து அசத்தினார். இதனால் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலைபெற்றது.
மாற்று வீரராக களமிறங்கிய இங்கிலாந்து வீரர் ஹென்டர்ஸன் ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் கோல் அடிக்க இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் வலுவாக இருந்தது. அதன்பின் ஆட்டம் முடியும் வரை உக்ரைன் அணியால் ஒரு கோல் அடிக்க முடியாமல் தோல்வி அடைந்தது. இங்கிலாந்து அணி 4-0 என்ற கோல்கணக்கில் அபார வெற்றியுடன், அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago