யூரோ கால்பந்து: ஹீரோவான சிமன்; அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்: பெனால்டிசூட்டில் ஸ்விட்சர்லாந்து தோல்வி

By ஏஎன்ஐ


செயின்ட்பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடந்த யூரோ கால்பந்துப் போட்டியின் பரபரப்பான காலிறுதி ஆட்டத்தில் ஸ்விட்டர்லாந்து அணியை 1-3 என்ற கோல் கணக்கில் பெனால்டிசூட்டில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றது ஸ்பெயின் அணி.

அரையிறுதியில், இத்தாலி அணியுடன் மோதுகிறது ஸ்பெயின் அணி. மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி வென்றது.

இரு அணிகளும் ஆட்டத்தின் முழுநேரமுடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்திலும் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததையடுத்து, பெனால்டிசூட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் ஸ்பெயின் அணியின் சுவராக இருந்த கோல்கீப்பர் உனய் சிமன் 3 கோல்களைத் தடுத்து ஸ்பெயின் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.

ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிய 13 நிமிடங்கள் இருந்த நிலையில் ஸ்விட்சர்லாந்து அணியின் மிட்ஃபீல்டர் ரெமோ ப்ரீலருக்கு ரெட்கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு ஸ்விட்சர்லாந்து அணி தள்ளப்பட்டது.

இருப்பினும் கூடுதல் நேரத்தில் ஸ்பெயினுக்கு கடும் சவால் அளிக்கும் விதத்தில் விளையாடிய ஸ்விட்சர்லாந்து அணி விளையாடியது. ஸ்பெயின் அடித்த கோலை ஸ்விட்ஸர்லாந்தின் கோல்கீப்பர் யான் சோமர் தடுத்தது ஸ்பெயினை கூடுதல் நேரத்தில் கோல் அடிக்க விடாமல் தடுத்தார். இதையடுத்து, வேறு வழியின்றி பெனால்டி சூட் முறைக்கு இரு அணிகளும் நகர்த்தப்பட்டன.

ஆட்டம் தொடங்கியதிலிருந்து களத்தில் ஆதிக்கம் செலுத்தி விளையாடிய ஸ்பெயின் வீரர்கள் கோல் அடிக்க பலமுறை பந்தை நெருக்கமாகக் கொண்டு சென்றும் முடியவில்லை. ஆனால், 8-வது நிமிடத்தில் ஜக்காரியா கோல் அடித்து ஸ்பெயினை 1-0 என்று முன்னிலைப்படுத்தினார். 23-வது நிமிடத்தில் ஸ்விட்சர்லாந்து அணி ப்ரீல் எம்போலோவுக்கு பதிலாக ரூபன் வார்காஸை களமிறக்கியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஆட்டத்தின் முதல்பாதிவரை ஸ்பெயின் அணி கடுமையான தற்காப்பு ஆட்டத்தைக் கையாண்டதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் இருந்தது.

ஆட்டத்தின் 2-வது பாதியில் ஸ்விட்சர்லாந்து அணி தனது யுத்தியை மாற்றி விளையாடியது ஓரளவுக்கு பயன் அளித்தது. ஸ்விட்சர்லாந்து அணியின் கேப்டன் ஹெர்டன் ஷாக்ரி 68-வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தார்.

ஆட்டம் முடிய 13 நிமிடங்கள் என்ற பரபரப்பான சூழலில் ஸ்பெயின் வீரர் மொரேனோவை தள்ளிவிட்டதற்காக, ஸ்விட்சர்லாந்து வீரர் ரெமோவுக்கு ரெட்கார்டு வழங்கப்பட்டதையடுத்து, அவர் வெளியேறினார். இதனால் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலைக்கு ஸ்விட்சர்லாந்து தள்ளப்பட்டது.

ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அந்த கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததையடுத்து, பெனால்டி சூட் முறைகொண்டுவரப்பட்டது.

இதில் ஸ்விட்சர்லாந்து வீரர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பில் அந்த அணி வீரர்கள் சார், கான்ச், வார்காஸ் ஆகியோர் அடித்த கோல்களை ஸ்பெயின் கோல்கீப்பர் சிமன் தடுத்தார், ஸ்விட்சர்லாந்து தரப்பில் காவ்ரோநோவிக் மட்டுமே கோல் அடித்தார்.

அதேசமயம் ஸ்பெயின் வீரர்கள் தரப்பில் ஒல்மோ, ஜெரார்டு, ஒயார்ஜாபால் ஆகியோர் கோல் அடித்தனர். பஸ்குட்ஸ், ரோட்ரி அடித்த கோல்கள் தடுக்கப்பட்டன. பெனால்டி சூட் முடிவில் ஸ்விட்சர்லாந்து அணியை 1-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

19 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்