களத்தில் இறங்கி பேட் செய்யும் போது எளிதில் தன்னை உணர்வு ரீதியாக காயப்படுத்தி விட முடியாது என்று கூறும் ஷிகர் தவண் கிரிக்கெட் தனக்கு சகிப்புத் தன்மையை கற்றுக் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
“எனக்கு கோபம் ஏற்பட்டால், பைக்கில் வேகமாகச் செல்வேன். பிறகு மெதுவே எனது எண்ணங்களையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்வேன். விரும்பத் தகாத செய்கைகளுக்கு நான் எதிர்வினையாற்றுவதில்லை. அமைதியாக இருப்பதன் கலையை நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
கிரீஸில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் எளிதில் உணர்வு ரீதியாக காயப்படாமல் இருப்பது அவசியம். என்னுடைய எதிர்மறை ஆற்றல்கள் வெளியேற நான் அனுமதிக்க வேண்டும். கிரிக்கெட் சகிப்புத்தன்மையை கற்றுக் கொடுத்திருக்கிறது என்பது உண்மைதான், நான் அதைக் கற்றுக் கொண்டு விட்டேன்.
கிரிக்கெட்டில் நீண்ட காலம் நீடிக்க உடல் வலு முக்கியம். எனவே பயிற்சி, முறையான ஊட்டச்சத்து உணவு, தியானம், ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறேன். கிரீஸில் அழுத்தத்தைக் குறைக்க பெருமூச்சுதான் எனது ஆயுதம்.
நான் என்னையே விமர்சனம் செய்து கொள்கிறேன், பாராட்டிக் கொள்கிறேன், எனக்கு நானே நண்பன். நான் கிரிக்கெட்டை நேசிக்கிறேன், அதேவேளையில் அதிலிருந்து விலகியிருக்கவும் விரும்புகிறேன்.
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டால் அது என்னை சோர்வடையச் செய்ய நான் அனுமதிக்கக் கூடாது. அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ஆனால் கிரிக்கெட்டுக்கு வெளியேயும் வாழ்க்கை உள்ளது.
சில ஷாட்களை ஆடும்போது எனக்கு நானே உத்வேகம் அளித்துக் கொள்வேன். இந்த குறிப்பிட்ட ஷாட் எனக்கு ரன்களைத் தருகிறது என்பதையும் அறிவேன். அது எனது விக்கெட்டையும் காலி செய்யும் என்பதையும் அறிவேன்.
எனக்கு எது சிறந்தது என்று எனக்குத்தான் தெரியும். ஷாட்களை ஆடுவதால் நான் பொறுப்பற்ற ஆட்டம் ஆடுவதாகக் கருத முடியாது. கிரீஸுக்கு வெளியே வந்து அடிக்க முயற்சி செய்வது, பவுலரை சற்றே பதட்டமடையச் செய்வதாகும். ஆக்ரோஷம் மூலம் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன். ரோஹித் சர்மாவும், நானும் அவ்வகையில்தான் திட்டமிடுகிறோம். ஆனால் நாங்கள் சோம்பல்தனத்தை வெளிப்படுத்துவதாக சிலர் கருதுகின்றனர். ஆனால் நாங்கள் அஜாக்கிரதையாக இல்லை, நிச்சயமாக அலட்சியமாக இல்லை.
எனது தோல்விகளை நான் சிரிப்பின் மூலம் விரட்டுவேன். ஏனெனில் அதனை அப்படித்தான் கையாள முடியும்” என்றார் ஷிகர் தவண்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago