யூரோ கால்பந்து தொடரில் உலக சாம்பியனான பிரான்ஸ் - ஹங்கரி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
யூரோ கால்பந்து தொடரில் நேற்று புடாபெஸ்ட் நகரில் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் - ஹங்கேரி அணிகள் மோதின. 14-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கரீம் பென்சீமா இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.
31- வது நிமிடத்தில் ஹங்கேரி அணியின் இரு டிபன்டர்களுக்கு இடையே பந்தை அற்புதமாக கரீம் பென்சீமாவுக்கு தட்டிவிட்டார் பிரான்ஸின் கிளியான் பாப்பே. அந்த சமயத்தில் கோல்கீப்பர் மட்டுமே நேருக்கு நேர் இருந்த நிலையில் கரீம் பென்சீமா பந்தை கோலாக மாற்றத் தவறினார்.
முதல் பாதியில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத் தில் ரோலண்ட் சல்லாயிடம் இருந்து பந்தை பெற்ற ஹங்கேரியின் அட்டிலா ஃபியோலா விரைவாக கடத்திச் சென்று கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஹங்கேரி 1-0 என முன்னிலை பெற்றது.
66-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தாக்குதல் ஆட்டம் தொடுத்தது. இதன் விளைவாக கிளியான் பாப்பே இலக்குக்கு மிக அருகில் இருந்து பந்தை பாக்ஸின் மையப்பகுதிக்குள் தட்டிவிட்டார்.
அப்போது அதை ஹங்கேரி டிபன்டர் வில்லி ஆர்பன் சரியாக தடுக்கத் தவறினார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அன்டோனி கிரீஸ்மான் பந்தை கோல் வலைக்குள் திணிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது.
90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 5-வது நிமிடத்தில் தாஸ் லெமரின் உதவியுடன் பந்தை பெற்ற ரபேல் வரேன், பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள முயன்றார். ஆனால் பந்து வலது புறம் விலகிச் செல்ல ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இங்கிலாந்து ஆட்டம் டிரா..
முன்னதாக லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தை கோல்களின்றி டிரா வில் முடித்ததன் மூலம் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் இங்கிலாந்து அணிக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய ஆட்டம்
இத்தாலி - வேல்ஸ்; நேரம்: இரவு 9.30
சுவிட்சர்லாந்து - துருக்கி; நேரம்: இரவு 9.30
நேரலை: சோனி சிக்ஸ்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago