டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தான் இன்னமும் ஓய்வு பெற்றுவிடவில்லை என்று கூறிய மேற்கிந்திய அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், பாக்சிங் டே அன்று தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்காக எதிராக களமிறங்க தன்னிடம் வெள்ளைச் சீருடை உள்ளது என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் முனைப்போடு கிறிஸ் கெயில் வந்திறங்கியுள்ளார். இது பற்றி கூறும்போது, “நான் இப்போதுதான் காயத்திலிருந்து மீண்டுள்ளேன். எனவே டெஸ்ட் அணியில் நான் இடம்பெறும் வாய்ப்பில்லை.
வங்கதேசத்தில் சில போட்டிகளில் ஆடினேன், அதுதான் எனது முதுகுக்கு சோதனைகளை கொடுத்தது. அதனால் வங்கதேச தொடரிலிருந்து விலகினேன். இங்கு வந்து மேலும் சிகிச்சைகள் பெற்று இன்னும் கொஞ்சம் உடல்வலு சேர்க்கவுள்ளேன்.
அடுத்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவேன், இது எனது திட்டங்களில் ஒன்று. மேற்கிந்திய அணியில் சில இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர், அவர்களின் திறமையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2-வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே அன்று மெல்பர்னில் தொடங்குகிறது, அன்று என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும், என்னிடம் வெள்ளைச்சீருடையும் உள்ளது தேவைப்பட்டால் இறங்கலாம்.
நான் முதுகு காயத்திலிருந்து மீண்டு வருகிறேன் இல்லையெனில் டெஸ்ட் அணியில் விளையாடியிருப்பேன், நான் டெஸ்ட் போட்டிகளிலிருந்து இன்னமும் ஓய்வு பெற்றுவிடவில்லை”
இவ்வாறு கூறினார் கிறிஸ் கெயில்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago