தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 3-0 என்று வீழ்த்தியதையடுத்து டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்ச் பற்றிய சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்தப் பிட்ச் சர்ச்சையில், பந்துக்கும் பேட்டுக்குமான சவால் சரிசமமாக இருக்கும் பட்சத்தில் அது எந்த அணிக்கான பிட்ச் என்ற கேள்வியும் விவாதமும் அவசியமற்றது என்று கூறியுள்ளார் இயன் சாப்பல்.
இது குறித்து ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:
நாக்பூர் மற்றும் அடிலெய்ட் பிட்ச்கள் பற்றி சமீபத்திய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நாம் கேள்வி ஒன்றை கேட்க வேண்டிய நேரம் கனிந்துள்ளது என்றே கருதுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வீரர்களின் திறமை முக்கியமா அல்லது பிட்ச்கள் முக்கியமா? என்பதே அந்த கேள்வி.
நாக்பூர் பிட்ச் பற்றி ஐசிசி விசாரணை மேற்கொள்ளுமானால் அடிலெய்ட் டெஸ்ட் போட்டி (ஆஸி.-நியூஸி. பகலிரவு டெஸ்ட் போட்டி 3 நாட்களில் முடிந்த்து) பிட்ச் பற்றியும் ஏன் விசாரணை கூடாது என்று இந்திய அணியின் இயக்குநர் ரவிசாஸ்திரி எழுப்பிய கேள்வியை நான் முழுதும் ஆமோதிக்கிறேன்.
டெல்லியில் இரு அணிகளுக்குமே சரிசமமான பிட்ச்தான், அதில் தென் ஆப்பிரிக்க வீர்ர்களின் பேட்டிங்கைப் பார்த்தேன். நாக்பூரில் அவர்கள் சிதைக்கப்பட்டது பற்றி எனக்கு எந்த ஆச்சரியமும் எழவில்லை.
தென் ஆப்பிரிக்க அணி வீர்ர்கள் தொடர்ந்து தவறான உத்திகளுடனும் மனநிலைகளுடனும் ஆடினால், எங்கு விளையாடுகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை, அந்த அணி நிச்சயம் கடினப்பாட்டை சந்தித்தே தீர வேண்டும்.
அவர்களது உத்தியும், மனநிலையும் எப்படியாவது நின்று விட வேண்டும் என்பதாகவே இருந்ததே தவிர ஆதிக்கம் செலுத்துவதாக இல்லை. ஸ்பின் பவுலர்களை நாம் நீண்ட நேரம் ஆதிக்கம் செலுத்த அனுமதித்தால் அதுவும் மட்டையைச் சுற்றி தடுப்பு வீரர்கள் நிற்கும் போதும், பிட்ச் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் போதும், நிச்சயம் களத்தில் நம் இருப்பு மிகச் சுருக்கமாகவே முடிந்து போகும்.
ஸ்பின்னர் சிறப்பாக இருக்கும் போது, பேட்ஸ்மெனின் மனநிலையும் ஆவேசமடைய வேண்டும். இதுதான் தீர்மானமான கால் நகர்த்தல்களை உருவாக்கும். புதிதாக இடப்பட்ட தாரில் மாட்டிக் கொண்டது போன்ற மனநிலை அத்தருணங்களில் ஒரு போதும் பயனளிக்காது. ஆக்ரோஷமான பேட்டிங் என்றால் பவுண்டரிகளை அடிப்பது மட்டுமல்ல. தொடர்ச்சியாக ஒரு ரன்னை எடுத்து பேட்டிங் முனையில் பேட்ஸ்மென்கள் மாறி மாறி ஆடினால், நிச்சயம் அது ஸ்பின் பவுலர்களின் ஒத்திசைவை கெடுக்கும்.
பவுண்டரி அடித்தால் கூட ஒரு ஸ்பின்னர் மீண்டும் அதே பேட்ஸ்மெனுக்குத்தான் வீசுவார். எனவே தொடர்ந்து சிங்கிள்கள் எடுத்துக் கொண்டிருந்தால் அது எவ்வளவு சிறந்த ஸ்பின்னர்களின் திட்டங்களையும் சற்றே முறியடிக்கவே செய்யும்.
அடிலெய்ட் பிட்சும் புற்களுடன் இரு அணிகளுக்கும், பேட்டிங், பந்து வீச்சு ஆகியவற்றுக்கும் சரிசமமாகவே இருந்ததைக் காண முடிந்தது.
பிட்சில் ஆடுவது இரு அணிகளும்தான், பிட்ச் வடிவமைப்பாளரை தவறுக்கு பொறுப்பாக்குதல் கூடாது.
இதுதான் நல்ல பிட்ச் என்றால் என்ன? என்ற கேள்வியை நமக்கு இப்போது ஏற்படுத்தியுள்ளது.
நல்ல பிட்ச் என்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சம வாய்ப்பு அளித்து நெருக்கமான, விறுவிறுப்பான முடிவுக்கு இட்டுச் செல்வதாகும். அதாவது நல்ல பிட்ச் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடியது. சில இடங்களில் வேகப்பந்து வீச்சுக்கும் சில இடங்களில் ஸ்பின் பந்து வீச்சுக்கும் சாதகமான் நிலைகள் உள்ளதை தவிர்க்க முடியாது.
ஒரு நல்ல பேட்ஸ்மன் எந்த நிலைமைகளிலும் சிறப்புறவே விரும்புவார். என்ன சவால்கள் ஏற்பட்டாலும் அதனை மனமகிழ்வுடன் எதிர்கொள்வார். முதல் நாளில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சை விட முதல்நாளில் ஸ்பின்னுக்கு சாதகமான பிட்ச் என்பது ஏன் மோசமானது என்பதாக பார்க்கப்படவேண்டும்.
மோதும் அணிகளுக்கிடையே சமச்சீர் தன்மையும், போதுமான அளவுக்கு திறமையை வெளிப்படுத்த முடியும் எனும் போது ‘உள்ளூர் சாதகம்’ என்பது எப்படி ஒரு அணிக்கு சாதகமாக மட்டுமே இருக்க முடியும்?
டி20 கிரிக்கெட்டினால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படுகிறது என்ற நிலையை கிரிக்கெட் எட்டிவிட்டது. இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் தற்போது ஆஸ்திரேலியாவில் மே.இ.தீவுகளின் ஆட்டம் ஆகியவை வழிகாட்டியாக இருக்குமேயானால், கிரிக்கெட்டின் அனைத்து முகங்களும் கேப்டன்சி உட்பட நீர்த்துப் போகவே வழிவகுக்கும்.
எனவே வீரர்கள் மீதுதான் நாம் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிட்ச் தயாரிப்பாளர்களை குறைகூறுவதில் கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்தப் பத்தியில் கூறியுள்ளார் இயன் சாப்பல்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
10 hours ago
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago