போர்ச்சுகல் நாட்டின், போர்டோ நகரில் நேற்று நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி - செல்சீ அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
2012ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் சாம்பியன் பட்டத்தை செல்சீ அணி வென்றது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் கடைசி வரை மான்செஸ்டர் சிட்டி அணி வீரர்களுக்கு கோல் அடிக்கும் எந்த வாய்ப்பையும் செல்சீ அணி வழங்கவில்லை.
செல்சீ 3-வது முறையாக சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் விளையாடியது. 2008ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியிடம் தோற்று 2-வது இடத்தை செல்சீ அணி பிடித்தது. 2012இல் பேயர்ன் மியூனிக் (ஜெர்மனி) அணியை வீழ்த்தி முதல் முறையாக செல்சீ அணி சாம்பியன் பட்டம் வென்றது.
போர்ச்சுகல் நாட்டில் உள்ள போர்டோ நகரில் நேற்று இந்த ஆட்டம் நடந்தது. சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி - செல்சீ அணிகள் மோதின.
2012ஆம் ஆண்டுக்குப் பின் செல்சீ அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதேபோல மான்செஸ்டர் சிட்டி அணியும் முதல் முறையாக ஃபைனலுக்குத் தகுதி பெற்றது.
ஆட்டம் முழுவதையும் ஆய்வு செய்தால், மான்செஸ்டர் சிட்டி வீரர்கள்தான் 61 சதவீதம் பந்தைத் தக்கவைத்திருந்தனர். செல்சீ வீரர்கள் 39 சதவீதம் தக்கவைத்தனர். ஆனால், என்னமோ தெரியவில்லை, கடைசிவரை மான்செஸ்டர் வீரர்களிடம் கூட்டுழைப்பு குறைவு, பந்தை பாஸ் செய்வதில் குளறுபடி போன்றவற்றால், கோல் அடிக்க முடியாமல் தோல்வி அடைந்தனர்.
ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் செல்சீ அணி வீரர் கெய் ஹவேர்ட் ஒரு கோல் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 2-வது பாதியில் மான்செஸ்டர் சிட்டி அணியில் கோல் அடிக்க கடுமையாக முயன்றும், பெனால்டி கார்கள் கிக் கிடைத்தும் அதே கோலாக்க முடியவில்லை. இறுதியில் 0-1 என்ற கணக்கில் செல்சீ அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்த ஆண்டு இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி அணி சாம்பியன்ஸ் லீக்கில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தலா 2 ஆட்டங்கள் கொண்ட அரையிறுதியில் மான்செஸ்டர் சிட்டி 4-1 என்ற கோல் கணக்கில் பாரிஸ் செயின்ட் ஜெர்மன் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு முன்னேறியது. அதேபோல் செல்சீ அணி 3-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago