அணியிலிருந்து நீக்கப்பட்டது காயப்படுத்தியதாக சேவாக் வருத்தம்

By ராமு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த சேவாக், தான் அணியிலிருந்து நீக்கப்பட்ட விதம் தன்னைக் காயப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போவுக்கு அவர் தெரிவிக்கும் போது, “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் நான் ரன்களை பெரிதாக எடுக்கவில்லை. எனவே அடுத்த 2 டெஸ்ட் போட்டிகள் நான் நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றே உறுதியாக நம்பினேன். ஆனால் அணியிலிருந்து நீக்கப்பட்டேன். அந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஆட அனுமதித்திருக்கலாம்.

நான் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, நான் ஒரு சிறந்த வீரர், இந்திய அணிக்குள் எப்படியும் மீண்டும் நுழைந்து விடலாம் என்றே எண்ணினேன். நான் இன்னும் ஆக்ரோஷமான் பேட்ஸ்மென், அடித்து ஆட முடியும், ரன்களை எடுக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதை நான் அப்போது உணரவில்லை. நான் என் பாணியிலேயே தொடர்ந்தேன். 2013-14 ரஞ்சி சீசனில் நான் சரியாக ரன்கள் எடுக்கவில்லை எனது அதிகபட்ச ஸ்கோரே 50 ரன்களுக்கு சற்று அதிகமாக இருந்தது அவ்வளவே. டெல்லியின் நிலைமைகளுடன் ஒத்துப்போக தடுமாறினேன்.

ஆனால் அடுத்த சீசனில் நான் என் மனநிலையை மாற்றிக் கொண்டேன். கொஞ்சம் நேரம் அதிகம் எடுத்துக் கொண்டு ஆடினேன் 500க்கு அதிகமான ரன்களை எடுத்தேன். ஆனால் இதனை முந்தைய சீசனில் செய்திருந்தால் ஒருவேளை நான் இந்திய அணிக்குள் மீண்டும் திரும்பியிருக்க முடியும். அது தாமதமாகப் போய்விட்டது, ஆனால் நான் ஏன் இன்னும் ஆடுகிறேன் என்றால், கிரிக்கெட்டை தொடர்ந்து ஆட விரும்புவதால்தான்.

நான் அணி நிர்வாகத்திடம் தொடக்கத்தில் அல்லாமல் பின்னால் இறங்கி ஆடுகிறேன் என்று கூறிப்பார்த்தேன். ஆனால் நான் தொடக்க வீரராக இன்னும் தொடர முடியும் என்று அவர்கள் நினைத்தனர். தொடக்க ஜோடியிடத்தில் அவர்கள் பரிசோதனைகளை மேற்கொள்ள விரும்பவில்லை. ஆனால் என்னால் இயன்ற அளவுக்கு மிடில் ஆர்டரில் இறங்க முயற்சிகளை மேற்கொண்டேன், ஆனால் நடக்கவில்லை. நான் எனது கடைசி டெஸ்ட் தொடரை ஆடும்போது டெண்டுல்கர் இருந்தார், கோலி, தோனி இருந்தனர், புஜாரா 3-ம் நிலையில் களமிறங்கினார். சச்சின் 4-ம் நிலையிலும், கோலி 5-ம் நிலையிலும் இருந்தனர். எனவே நான் 6-ம் நிலையில் இறங்க வேண்டும். டெண்டுல்கரை 3 அல்லது 5-ம் நிலையில் இறங்கக் கூற முடியாது. எனவே மிடில் ஆர்டரில் எனக்கு வாய்ப்பில்லாமல் போனது.

ஆசியாவுக்கு வெளியே ஆடியது பற்றி..

ஆசியாவுக்கு வெளியே சேவாக் சராசரி 35.84 என்று சுட்டிக்காட்டியதற்கு அவர் கூறிய போது, “விளையாடும் போது இதைப்பற்றியெல்லாம் யோசனை இருப்பதில்லை. ஓய்வு பெற்ற பிறகு திரும்பிப் பார்த்தால், ஆசியாவுக்கு வெளியே எனது சராசரி 40. மொத்தமாக சராசரி 49. நான் எதையாவது இதில் மாற்றம் செய்ய விரும்பினேன் என்றால் ஆசியாவுக்கு வெளியே எனது சராசரியை உயர்த்தியிருப்பதாகத்தான் அது இருந்திருக்கும். நான் கடுமையாக அப்பகுதிகளில் முயற்சி செய்தேன். ஆனால் என்னால் ஏனோ முடியவில்லை. நான் சிறப்பாக பங்களிப்பு செய்தேன், ஆனால் எனது திறமைக்கேற்ப ஆடவில்லை. திராவிட், சச்சின், கங்குலி, லஷ்மண் இதனைச் செய்தனர், சதங்களை எடுத்துள்ளனர்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

21 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்