சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலி்ல் பந்துவீச்சாளர்களில் வங்கதேச சுழற்பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் இரு இடங்களில் இடம் பிடித்த 3-வது வங்கதேச வீரர் எனும் பெருமையை மெஹதி ஹசன் பெற்றார். இதற்கு முன் சஹிப் அல் ஹசன் 2009ம் ஆண்டில் முதலிடத்திலும், 2010ம் ஆண்டும் அப்துர் ரஹிம் 2-வது இடத்தையும் பிடித்திருந்தனர்.
இலங்கைக்கு எதிராக தாகாவில் நடந்து வரும் ஒருநாள் தொடரில் இரு போட்டிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியத் தொடர்ந்து மெஹதி ஹசன் 3 இடங்கள் நகர்ந்து 725 புள்ளிகளுடன் 2 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் நியூஸிலாந்து வீரர் டிரன்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் உள்ளார்.
வங்கதேச இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் 8 இடம் நகர்ந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு 5-வது இடம் வரை ரஹ்மான் முன்னேறியதுதான் சிறந்ததாகும்.
3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மானும், 4-வது இடத்தில் நியூஸிலாந்து வீரர் மாட் ஹென்றியும் உள்ளனர். 5-வது இடத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். 6 முதல் 10 இடங்கள் வரை முறையே காகிசோ ரபாடா, கிறிஸ் வோக்ஸ், ஹேசல்வுட், கம்மின்ஸ் உள்ளனர்.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் 865 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் இந்திய அணியி்ன் கேப்டன் விராட் கோலி 857 புள்ளிகளுடனும், 825 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் வரிசையில், வங்கதேச வீரர் சகிப் அல் ஹசன் 396 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இதில் இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா 295 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார். மற்ற எந்த இந்திய வீர்களும் இதில் இல்லை.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago