ஐபிஎல் 2-வது பாதி ஆட்டங்களை செப்-அக். மாதத்தில் நடத்த திட்டம்: மே.இ.தீவுகள், இங்கி. வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்? பிசிசிஐ பேச்சுவார்த்தை

By ஏஎன்ஐ

14-வது சீசன் ஐபிஎல் டி20 தொடரின் 2-வது பாதி ஆட்டங்களை செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவால் பாதியிலேயே நின்றுபோன ஐபிஎல் தொடரின் மீதமுள்ள ஆட்டங்கள், உலகக் கோப்பை டி20 போட்டி இரண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவே அதிகமான வாய்ப்புள்ளது.

இந்தியாவில் மீண்டும் கரோனா பாதிப்பு அச்சம் நீங்கவில்லை, 2-வது அலை முழுமையாக ஓயாத நிலையில் சர்வதேச வீரர்கள் வந்து விளையாடுவது சாத்தியமில்லை என்பதால், ஐக்கியஅரபு அமீரகத்துக்கு மாற்றப்பட உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் தொடங்கிவிடும் என்பதால் அங்கிருந்து மே.இ.தீவுகள் வீரர்கள் வந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.

அதேபோல, 2-வது பாதி ஐபிஎல்தொடரில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று இங்கிலாந்து கிரி்க்கெட் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால், அந்த நாட்டு வீரர்கள் வருவதிலும் சி்க்கல் எழுந்துள்ளது. இந்த இரு விவகாரங்களையும் சமாளிக்கும் முயற்சியில் பிசிசிஐ தற்போது இறங்கியுள்ளது.

பிசிசிஐ தி்ட்டப்படி 25 நாட்களுக்குள் மீதமிருக்கும் 31 ஆட்டங்களையும் நடத்திமுடித்துவிடலாம் என்று எண்ணுகிறது. ஆனால் இந்த காலகட்டத்துக்குள் விரைந்து ஐபிஎல் முடித்தால், அடுத்த சில நாட்களுக்குள் உலகக்கோப்பை டி20 தொடர் தொடங்கிவிடும், வீரர்களுக்கு ஓய்வு இன்றி அடுத்தடுத்து பங்கேற்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்தபின், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியுடன் கோலிப் படைவிளயைாடுகிறது. இந்த போட்டிகள் முடிந்தவுடன் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வர வேண்டும், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், உலகக் கோப்பை டி20க்கு தயாராக வேண்டும் என வீ்ரர்கள் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஐபிஎல் டி20 தொடர் என்றாலே மே.இ.தீவுகள் இல்லாமல் சுவாரஸ்யமாகஇருக்காது. ஆனால், பிசிசிஐ திட்டமிடப்படி நாட்ககளில் ஐபிஎல் தொடர் நடந்தால் மே.இ.தீவுகள் அணியினர் யாரும் பங்ேகற்க முடியாத சூழல் ஏற்படும். இதனால், கரீபியன் கிரிக்கெட் லீக் அமைப்புடன் தேதிகளை மாற்றுவது, வீரர்களை முன்கூட்டியே விடுவிப்பது குறித்து பிசிசிஐ பேசி வருகிறது.

இங்கிலாந்து அணியும் டெஸ்ட் தொடர் முடிந்தபின் வங்கதேசத்துக்கும், பாகிஸ்தானுக்கும் பயணம் செய்யஇருப்பதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என்றேத் தெரிகிறது.

இதற்கிடையே அக்டோபர் மாதத்தில் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில்லதான் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளை பிசிசிஐ நடத்த திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்