டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு செய்திகளை மறுக்கும் டிவில்லியர்ஸ்

By இரா.முத்துக்குமார்

பணிச்சுமை குறித்து தனக்கு கவலை உள்ளது என்று தெரிவித்த டிவில்லியர்ஸ், நிச்சயம் அனைத்து வடிவங்களிலும் தொடர்ச்சியாக விளையாடுவதை பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

திடீரென டிவில்லியர்ஸ் இது பற்றி பேசக் காரணம் என்ன? ரேப்போ என்ற செய்தித்தாள், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் நடைபெறும் விதம் மீது அதிருப்தி கொண்டு டிவில்லியர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் எண்ணத்தில் இருப்பதாக ஒரு செய்தி வெளியிட்டதே குழப்பங்களுக்குக் காரணம்.

ஆனால், இது பற்றி டிவில்லியர்ஸ், ஓய்வு குறித்த எண்ணம் பற்றிய செய்தியை திட்டவட்டமாக மறுக்காமல் கூறும்போது, “நிறைய வதந்திகள் பேசப்பட்டு வருகின்றன. ஆனால் கடந்த 2, 3 ஆண்டுகளாக நான் பேசிவருவதெல்லாம், என்னை புத்துணர்வுடன் வைத்திருப்பது எப்படி, ஆங்காங்கே சில போட்டிகளிலிருந்து ஓய்வு என்பதாகவே இருந்து வந்தது.

எல்லாவற்றையும் விட நான் கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆட வேண்டும் என்பதே. எனது கிரிக்கெட் கரியரை முன்னெடுத்துச் செல்வதில் எத்தனை போட்டிகள் என்பதையும் நான் தீர்மானிக்க வேண்டியுள்ளது. இதுதான் முகாமில் பேச்சாக எழுந்துள்ளது. என்னைப் பொருத்தவரையில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடமுடியாது என்பதாகவே உள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் நான் ஆடினேன் என்றல் சீசன் முடியும் போது களைப்படைகிறேன். இதைத்தான் நான் கடந்த சிலகாலமாக பேசி வருகிறேன். எனது நாட்டிற்காக ஆடுவதில் பெருமை உள்ளனவாகவே எப்போதும் இருக்கிறேன். அதில் மாற்றம் எதுவுமில்லை. என்னை தொடர்ந்து புத்துணர்வுடன் வைத்து கொண்டு, ஆட்டத்தை மகிழ்வுடன் ஆட வேண்டும் என்பதே எனது அவா” என்றார் டிவில்லியர்ஸ்.

2004-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான டிவில்லியர்ஸ் தொடர்ச்சியாக 98 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். சமீபத்திய வங்கதேசத் தொடரைத்தான் அவர் தனது முதல் குழந்தைப் பிறப்பையொட்டி ஆடாமல் விட்டார்.

மேலும் ஒருநாள் கிரிக்கெட், டி20, ஐபிஎல் என்பதோடு டெஸ்ட் போட்டிகளில் சில போட்டிகளில் கடினமான விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொண்டார், ஆனால் டி காக் மற்றும் டேன் விலாஸ் என்று தென் ஆப்பிரிக்கா புதிய விக்கெட் கீப்பர்களை முயன்று பிறகு தற்போது இங்கிலாந்துக்கு எதிராக டிவில்லியர்ஸே விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, இது அவருக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ரேப்போ பத்திரிகை செய்தி குறிப்பிட்டது.

மேலும் அணித்தேர்வு விவகாரங்களிலும் டிவில்லியர்ஸ் அதிருப்தி அடைந்துளதாக தெரிகிறது. உலகக் கோப்பை அரையிறுதியில் கைல் அபாட்டுக்கு பதிலாக வெர்னன் பிலாண்டர் தேர்வு செய்யப்பட்டதும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல்தான் இருந்தது.

டிவில்லியர்ஸ் மட்டுமல்ல, தொடர்ந்து காயத்தினால் அவதியுறும் டேல் ஸ்டெய்ன், கவுண்டி கிரிக்கெட்டை குறிவைக்கும் வெர்னன் பிலாண்டர் ஆகியோரும் ஓய்வு பெறலாம் என்று ரேப்போ கூறியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்