மே.இ.தீவுகளை வீழ்த்தி 20 ஆண்டுகளாக பிராங்க் வொரல் கோப்பையை தக்கவைத்த ஆஸ்திரேலியா

By இரா.முத்துக்குமார்

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகளை 177 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி 1995-ம் ஆண்டு முதல் 2015 வரை பிராங்க் வொரல் டெஸ்ட் டிராபியைத் தக்கவைத்து சாதனை புரிந்துள்ளது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2-0 என்று ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

மே.இ.தீவுகள் மண்ணில் 1995-ம் ஆண்டு மார்க் டெய்லர் தலைமையில் சாதித்த டெஸ்ட் தொடர் வெற்றி தற்போது வரை நீடித்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில் 179/3 என்ற நிலையில் டிக்ளேர் செய்ய, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் சரணடையாமல் சற்றே போராட்ட குணத்தை வெளிப்படுத்தி 282 ரன்கள் வரைத் தாக்குப் பிடித்தது.

நேதன் லயன் அருமையாக வீசி இந்த டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார். மிட்செல் மார்ஷ் தனது மிதவேகப்பந்து வீச்சின் மூலம் அவ்வப்போது வேகம் கூட்டி பந்துகளை எழும்பச் செய்து அதிர்ச்சியளித்தார். இதனால் 4 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார்.

தொடக்க வீரர்களான கிரெய்க் பிராத்வெய்ட் மற்றும் ராஜேந்திர சந்திரிக்கா ஆகியோர் ஜேம்ஸ் பேட்டின்சன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரது தொடக்க ஓவர்களை நிதானத்துடன் எதிர்கொண்டனர். இருவரும் 11 ஓவர்கள் தாக்குப் பிடித்து 35 ரன்களைச் சேர்த்தனர். அப்போது 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்த கிரெய்க் பிராத்வெய்ட் கட் ஆட முடியாத நேதன் லயன் பந்தை கட் ஆட முயன்று ஸ்லிப்பில் ஸ்மித் கையில் சிக்கி நடையைக் கட்டினார்.

அடுத்த 22 ஓவர்களை டேரன் பிராவோ, சந்திரிகா ஆகியோர் சிறப்பான தடுப்பாட்டத்துடன் அவ்வப்போது சில ஷாட்களுடன் ஆடினர். 2-வது விக்கெட்டுக்காக 48 ரன்கள் சேர்த்தனர், உணவு இடைவேளைக்கு சற்றுமுன் ஹேசில்வுட் நோ-பாலில் டேரன் பிராவோ எட்ஜ் செய்தார், அது கேட்ச் ஆனாலும் நாட் அவுட். தப்பித்தார் பிராவோ.

ஆனால் பீட்டர் சிடில் பந்தில் 21 ரன்களில் அவரது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. விக்கெட் கீப்பர் நெவிலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சந்திரிகா 130 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் பேட்டின்சன் பந்தில் எல்.பி. ஆனார். சாமுயெல்ஸ் 19 ரன்னில் மிட்செல் மார்ஷ் பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற மே.இ.தீவுகள் 118/4 என்று ஆனது. பிளாக்வுட், ராம்தின் தேநீர் இடைவேளை வரை சேதமேற்படமால் ஸ்கோரை 146 ரன்களுக்குக் கொண்டு சென்றனர்.

தேநீர் இடைவேளை முடிந்தவுடன் 150 ரன்களாக இருந்த போது 20 ரன்கள் எடுத்த பிளாக்வுட், நேதன் லயன் பந்தில் எல்.பி.ஆனார். ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆடச் சென்று பந்தைக் கோட்டை விட பந்து பின் தொடையில் பட்டு எல்.பி.ஆனது.

அதன் பிறகு தினேஷ் ராம்தின் (59), கேப்டன் ஹோல்டர் (68) ஆகியோர் 6-வது விக்கெட்டுக்காக 100 ரன்களைச் சேர்த்தனர். ராம்தின், ஹோல்டர் இருவரையும் மிட்செல் மார்ஷ் வீழ்த்த சி.ஆர்.பிராத்வெய்ட், கிமார் ரோச், டெய்லர் ஆகியோர் அடுத்தடுத்து நடையைக் கட்டினர். கடைசி 5 விக்கெட்டுகளை 32 ரன்களுக்கு இழந்த மே.இ.தீவுகள் 88.3 ஓவர்களில் 282 ரன்களுக்குச் சுருண்டு தோல்வி அடைந்தது.

மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 3 விக்கெட்டுகளையும், பேட்டின்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிடில் ஒருவிக்கெட்டை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்று கைப்பற்றி பிராங்க் வொரல் டெஸ்ட் டிராபியை 20-வது ஆண்டாக தக்கவைத்தது ஆஸ்திரேலியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்