இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காகச் செல்லும் இந்திய அணி, அதன்பின் 5 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்தத் தொடருக்கான உத்தேச வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் வரும் ஜூன் 18 முதல் 22ஆம் தேதிவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இதற்காகச் செல்லும் இந்திய அணி 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்குப் பின் பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்று, இறுதிப் போட்டிக்குத் தயாராகும்.
இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர் முடிந்தபின், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.
ஆகஸ்ட் 4 முதல் 8 வரை நாட்டிங்காமில் முதல் டெஸ்ட், லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட்12-16 வரை 2-வது டெஸ்ட், லீட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 25-29 வரை 3-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது. ஓவல் மைதானத்தில் செப்.2-6 வரை 4-வது டெஸ்ட் போட்டியும், செப். 10-14 வரை 5-வது டெஸ்ட் போட்டியும் நடக்கிறது.
இந்தத் தொடருக்கு இந்திய அணி வீரர்கள் யாரும் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும், உத்தேச வீரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 30 உத்தேச வீரர்கள் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
இந்திய அணிக்குக் கூடுதல் தொடக்க ஆட்டக்காரர்கள் தேவை என்பதால், அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பஞ்ச்சல், தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்படலாம். ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட பிரித்வி ஷா மீண்டும் டெஸ்ட் தொடருக்கு அழைக்கப்படலாம். இதில் ஈஸ்வரன், பஞ்ச்சல் இருவரும் காத்திருப்பு தொடக்க வீரர்களாக இருக்க வாய்ப்புண்டு.
விக்கெட் கீப்பருக்கு ரிஷப் பந்த், விருதிமான் சாஹா இருந்தபோதிலும் கூடுதல் விக்கெட் கீப்பர்கள் இடத்துக்கு இஷான் கிஷன், கோனா பரத் இருவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம்.
சுழற்பந்துவீச்சுக்கு அஸ்வின், ரவிந்திர ஜடேஜா தவிர்த்து, அக்ஸர் படேல், ராகுல் சாஹர் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஹர்திக் பாண்டியாவால் அதிக அளவு பந்துவீச முடியாது என்பதால், பேட்டிங் ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்படலாம்.
நடராஜனுக்கு ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடைந்து வரமுடியாவிட்டால், ஜெயதேவ் உனத்கத், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர் அணிக்குத் தேர்வு செய்யப்படலாம்.
இதில் முகமது ஷமி, ஹனுமா விஹாரி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் மீண்டும் அணிக்குள் வரக்கூடும். வலையில் பந்துவீசுபவர்களாக சேத்தன் சக்காரியா, அங்கித் ராஜ்புத் தேர்வு செய்யப்படலாம்.
30 உத்தேச வீரர்கள்:
(தொடக்க ஆட்டக்காரர்கள்)
ரோஹித் சர்மா, ஷூப்மான் கில், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், அபிமன்யு ஈஸ்வரன், பிரயங்க் பஞ்ச்சல், தேவ்தத் படிக்கல்.
நடுவரிசை வீரர்கள்
சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, கே.எல்.ராகுல்.
ஆல்ரவுண்டர்கள்
வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா.
சுழற்பந்துவீச்சாளர்கள்
ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ராகுல் சஹர்.
வேகப்பந்துவீச்சாளர்கள்
ஜஸ்பிரித் பும்ரா, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், நவ்தீப் ஷைனி, ஆவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, புவனேஷ்வர் குமார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago