ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கில் அவரின் வீட்டின் அருகே மர்மநபர்களால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். அதன்பின் நீண்ட போராட்டத்துக்குப்பின் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் மெக்கில். கடந்த மாதம் 14-ம் தேதி சிட்னியில் உள்ள அவரின் வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர் , மெக்கில்லை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.
சிட்னி நகரின் வேறு ஒரு இடத்துக்கு மெக்கில்லை கொண்டு சென்ற 4 பேரும், அவரைத் தாக்கி, மிரட்டியுள்ளனர். ஏறக்குறைய ஒருமணிநேரம் மெக்கில்லை கடுமையாகத் தாக்கிவிட்டு அவரை பெல்மோர் எனும் பகுதியில் கொண்டுவந்துவிட்டு தப்பிவிட்டனர்.
தன்னைக் கடத்தி, தாக்கியது குறித்து நியூ சவுத்வேல்ஸ் போலீஸாரிடம் மெக்கில் புகார் அளித்தார். இது தொடர்பாக நியூ சவுத்வேல்ஸ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், 27,29,42, மற்றும் 46 வயதுள்ள 4 பேரை இன்று கைது செய்தனர்.
இதுகுறித்து நியூசவுத்வேல்ஸ் காவல் கண்காணிப்பாளர் அந்தோனி ஹால்டர் கூறுகையில் “ கடந்த 14-ம்தேதி ஸ்டூவர்ட்மெக்கில் தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோது காரில் வந்த 4 பேர் அவரைக் கடத்திச் சென்று, பிரிங்லிபகுதிக்குக் கொண்டு சென்று தாக்கியுள்ளனர், அவரை துப்பாக்கியால் மிரட்டியுள்ளனர்.
அதன்பின் ஒருமணிநேரத்துக்குப்பின், பெல்மோர் பகுதியில் இறக்கிவிட்டு அந்த நபர்கள் தப்பிவிட்டார்கள். பணத்துக்காக இந்த கடத்தல் நடந்திருக்கலாம். இந்த கடத்தல் விவகாரம் குறித்து எங்களுக்கு 20ம் தேதிதான் புகார்அளிக்கப்பட்டது. அதன்பின், 4 சிறப்பு தனிப்படைகள் உதவியுடன் தீவிரமாக தேடினோம்.
அப்போது இன்று அதிகாலை இந்த கடத்தல் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்தோம்” எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான மெக்கில் 1998 முதல் 2008ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
4 டெஸ்ட்போட்டிகளில் விளையாடிய மெக்கில் 208 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஷேன் வார்னேவுக்கு அடுத்தார்போல் ஆஸ்திரேலியாவில் சுழற்பந்துவீச்சில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியதில் 2-வது இடத்தில் மெக்கில் உள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago