ஷிகர் தவணின் பொறுப்பான பேட்டிங், ரபாடாவின் பந்துவீச்சு ஆகியவற்றால் அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. 167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 14 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் ேசர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி பிடித்துள்ளது. 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்வி என 12 புள்ளிகளுடன் டெல்லி அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி என 4 புள்ளிகளுடன் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 போட்டியில் 13-வது முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி தோற்கடித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த 5 போட்டிகளில் தொடர்ச்சியாக டெல்லி கேபிடல்ஸ் அணி பெற்ற 4-வது வெற்றியாகும்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் கே.எல்.ராகுல் அறுவை சிகிச்சை காரணமாக தொடரிலிருந்து வெளியேறிவிட்டதால் அவருக்குப் பதிலாக கேப்டன் பொறுப்பை மயங்க் அகர்வால் நேற்று கவனித்தார்.
கேப்டனாக பொறுப்பேற்றவர்தான் அணியை தோளில் சுமக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக சில அணிகளுக்கு மட்டும் இருக்கிறது. பஞ்சாப் அணி சேர்த்த ரன்களில் 60 சதவீத ரன்களை மயங்க் அகர்வால் சேர்த்தார். 58 பந்துகளில் 4 சிக்ஸர்,8 பவுண்டரி உள்பட 99 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மயங்க் அகர்வாலுக்குத்தான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐபிஎல் தொடரில் கேப்டனாகப் பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்த 2-வது வீரர் மயங்க் அகர்வால்(99). இதற்கு முன் சாம்ஸன் கேப்டனாகப் பொறுப்பேற்று முதல் ஆட்டத்தில் 119 ரன்கள் சேர்த்திருந்தார்.
ஐபிஎல் தொடரில் 99 ரன்களில் நாட்அவுட்டாக இருந்த வீரர்களில் 3-வது வீரர் மயங்க் அகர்வால். இதற்கு முன் சுரேஷ் ரெய்னா(99,சன்ரைசர்ஸ்), கிறிஸ் கெயில்(99,ஆர்சிபி) ஆகியோர் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 2011ம் ஆண்டுக்குப்பின் அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்த பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் எனும் பெயரை மயங்க் அகர்வால் பெற்றார். கடைசியாக 2011ல் ஷான் மார்ஷ் 91 ரன்கள் சேர்த்தே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது.
பஞ்சாப் அணியைப் பொருத்தவரை பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் வீரர்கள் மத்தியில் பொறுப்பற்ற தன்மை நேற்றைய ஆட்டத்தில் நிரம்பிஇருந்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடினார்களா, அல்லது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஆடினார்களா என்ற வித்தியாசமில்லாமல் இருந்தது.
பேட்டிங்கில் மயங்க் அகர்வால்(99), டேவிட் மலான்(26) தவிர்த்து மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் சொல்லிக்கொள்ளும் வகையில் ரன்கள் சேர்க்கவில்லை. கேப்டனாகப் பொறுப்பேற்பவர்தான் அணியின் ஒட்டுமொத்த சுமையையும் தாங்கும் நிலைதான் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் இருக்கிறது. ஆதலால் இனிமேல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருப்போர் அனைவரையும் கேப்டனாக மாற்றிவிட்டால்தான் இனி ஒழுங்காகக விளையாடுவர்கள் போல் தெரிகிறது.
ராகுல் கேப்டனாக இருந்தபோதும் இதே நிலைதான், பந்துவீச்சாளர்களில் முகமது ஷமி மட்டும் பங்களிப்பு செய்துவந்தார். ஆனால், ராகுல் கேப்டன் பொறுப்பில் இல்லை என்றவுடன் பேட்டிங்கும் படுமோசம், பந்துவீச்சு அதைவிட மோசமானது.
அதிரடி பேட்ஸ்மேன் என நம்பி தமிழக வீரர் ஷாருக்கானை பஞ்சாப் அணி விலைக்கு வாங்கியது, ஒரு போட்டியில் அடித்ததோடு சரி அதன்பின் ஷாருக்கான் பேட்டிங் ஜொலிக்கவில்லை.
ஹர்பிரீத் பிரார் நன்றாக பேட்டிங் செய்வதால் அவரை கடைசி வரிசையில் களமிறக்காமல் நடுவரிசையில் களமிறக்க வேண்டும். நடுவரிசை பேட்ஸ்மேன்கள் இவ்வளவு மோசமாகவா விளையாடுவது. சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆகிய 3 அணிகளிலுமே நடுவரிசை பேட்டிங் படுமோசமாக இருக்கிறது.
பந்துவீ்ச்சில் ஹர்பிர்த் பிரார் தவிர அனைத்துப் பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி வழங்கினர். மெரிடித் அதிகமான வேகத்தில் பந்துவீசினாலும், துல்லியமின்மையால், ரன்களை வாரி வழங்கினார். அனுபவ வீரர் முகமது ஷமி கூட இப்படியா பந்துவீசுவார் என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜோர்டன், பிஸ்னோய் இருவரின் பந்துவீச்சிலும் டெல்லி கேபிடல்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் தன்மை ஏதுமில்லை.
அர்ஸ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசக்கூடியவர், அவரை எதற்காக நேற்று எடுக்கவி்ல்லைஎனத் தெரியவி்ல்லை. நெருக்கடியான நேரத்தில், டெத்ஓவர்களில் அர்ஸ்தீப் அருமையாகப் பந்துவீசும் திறமை படைத்தவர் அவரை அமரவைத்தது மிகப்பெரிய தவறு
166 ரன்கள் ஸ்கோர் என்பது ஓரளவுக்கு எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்கோர் என்பதில் சந்தேகமில்லை. பந்துவீச்சாளர்கள் தங்கள் பங்களிப்பை முறையாக வழங்கியிருந்தால், விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் வீழத்தி, ரன்களை வழங்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசியிருந்தால், வெற்றிக்கு முயற்சித்திருக்கலாம்.
ஆனால், அணிக்கும், தங்களுக்கும் தொடர்பில்லாத வகையில் பந்துவீசி ஒட்டுமொத்த தோல்விக்கும் பந்துவீச்சாளர்கள் காரணமாகினர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியைப் பொருத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் தங்களின் வலிமையை வெளிப்படுத்திக்கொண்டே வருகிறது. தொடக்க வரிசையில் பிரித்வி ஷா, தவண் இருவரும் எந்த அணிக்கும் சவாலான பேட்ஸ்மேன்களாக மாறி வருகிறார்கள்.
வலுவான நடுவரிசை பேட்ஸ்மேன்களான கேப்டன் ரிஷப்பந்த், ஸ்மித், ஸ்டாய்னிஷ், ஹெட்மெயர்,அக்ஸர் படேல் என நல்ல பேட்டிங் வரிசை இருக்கிறது. ஆனால் இதுவரை டெல்லி அணி மோதிய போட்டிகளில் கடைசிவரிசை வரை எந்த பேட்ஸ்மேன்களும் விளையாடும் அளவுக்கு அணியை கொண்டு செல்லாமல் வெற்றியைப் பெறுவது சிறப்பு. பந்துவீச்சில் ரபாடா பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்த்தும் ஃபார்மை ேநற்று பெற்றுவிட்டார். அக்ஸர் படேல் அருமையான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒட்டுமொத்தத்தில் டெல்லி அணி, குழுவாக செயல்பட்டதற்கு கிடைத்தவெற்றி.
டெல்லி அணியைப் பொருத்தவரை ஷிகர் தவண் அந்த அணிக்கு கிைடத்த மிகப்ெபரிய சொத்து. பஞ்சப் கிங்ஸ் அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக ஆடும் தவண் நேற்றும் தவறவில்லை 8-வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களை நேற்றும் குவித்தார். அதுமட்டுமல்லாமல் 46-வது முறையாக 50-க்கும் மேற்பட்ட ரன்களை தவண் குவித்து கோலியின்(45) சாதனைய முறியடித்துவி்ட்டார்.
167 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் தவண், பிரித்வி ஷா களமிறங்கினர். இந்தத் தொடரில் கலக்கிவரும் பிரித்விஷா இந்த ஆட்டத்திலும் அதிரடியான தொடக்கத்தை அளித்தார், தவணும் ஒத்துழைத்து ஆடியதால், 10 ரன்ரேட்டில் சென்றது. பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி டெல்லி அணி 63 ரன்கள் சேர்த்தது
பவர்ப்ளே முடிந்து பிரார் பந்துவீச வந்தார். முதல்பந்திலேயே போல்டாகி பிரித்வி ஷா 39ரன்னில்(3சி்க்ஸர்,3பவுண்டரி) ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். அடுத்துவந்த ஸ்மித், தவணுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். தவண் 35 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
ஸ்மித் 24 ரன்னில் மெரிடித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 58 ரன்கள் சேர்த்தனர். அடுத்து களமிறங்கி கேப்டன் ரிஷப் பந்த் 14 ரன்னில் ஜோர்டான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தவண், ஹெட்மெயர் ஜோடி இறுதிதிவரைஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
தவண் 47பந்துகளில் 69 ரன்களுடனும்(2சிக்ஸர்,6பவுண்டரி), ஹெட்மயர் 16ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது.
பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில்பேட் செய்தது. பிரப்சிம்ரன் சிங், அகர்வால் ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கம்போல், பிரப்சிம்ரன் சிங்(7) ரன்னில்விரைவாக ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கெயில் ஒரு பவுண்டரி, சிக்ஸர் அடித்து 19ரன்னில் ரபாடா பந்துவீச்சில் போல்டாகினார்.
பவர்ப்ளே ஓவருக்குள் 2 விக்கெட்டுகளை இழந்துபஞ்சாப் தடுமாறியது. 3-வது விக்கெட்டுக்கு மலான், அகர்வால் ஜோடி அணியை ஓரளவுக்கு கட்டமைத்தனர். இருவரும் 3-வது விக்ெகட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தனர். டேவிட்மலான் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய அகர்வால் 37 பந்துகளில் அரைசதம் அடித்தார். நடுவரிசை பேட்ஸ்மேன்களான ஹூடா(1), ஜோர்டான்(2), ஷாருக்கான்(4) எனவரிசையாக வீழ்ந்தனர். விக்ெகட்டுகள் வீழ்ந்தாலும் மயங்க் அகர்வால் தனது அதிரடியான ஷாட்கள் மூலம் ரன்களை சேர்த்துக்கொண்டே அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அகர்வால் 99 ரன்களுடனும், பிரார் 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்தது. டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago