14ஆம் சீசன் ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்த ஆண்டு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் வெல்லும் என்று நியூஸிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், முன்னாள் சாம்பியன் சிஎஸ்கே அணிக்கும் இன்று லீக் ஆட்டம் நடக்க உள்ள நிலையில், இந்தக் கருத்தை ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் மும்பை அணி 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள், 3 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. ஆனால், சிஎஸ்கே அணி 6 போட்டிகளில் ஒரு தோல்வி, தொடர்ந்து 5 வெற்றிகள் என 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் நியூஸிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது:
''அணியின் வலிமையைப் பொறுத்தவரை மும்பைதான் நம்பர் ஒன். அதில் நான் மாறவில்லை. மும்பைதான் முதலிடத்தில் உள்ளது. ஆனால், ஆட்டத் திறன், களத்தில் திறமையை நிரூபிப்பது போன்றவற்றில் சிஎஸ்கே அணிதான் முதலிடம். இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தையும் சிஎஸ்கே வெல்லக்கூடும்.
இன்று நடக்கும் மும்பை அணிக்கு எதிரான ஆட்டம்கூட சிஎஸ்கே அணிக்குச் சிறிய பரிசோதனைதான். வலிமையான மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தன்னை நிரூபிக்க வேண்டியது அவசியம்.
இதுவரை விளையாடிய ஆட்டங்களை வைத்து மும்பை அணியைக் கணிக்க முடியாது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் மிகவும் மோசமானது. அந்த ஆடுகளத்திலிருந்து மும்பை அணி வந்துவிட்டது. இப்போது நல்ல பேட்டிங் பிட்ச்சில் ஆடி வருகிறது. ஆதலால், அடுத்துவரும் போட்டிகளில் மும்பை அணி வீரர்களின் திறமையை எதிர்பார்க்கலாம்.
ஆனால், சிஎஸ்கே அணி வெல்வதைத்தான் விரும்புகிறேன். ஏற்கெனவே 3 முறை கோப்பையை வென்ற அணி, இந்த முறையும் அதற்குரிய தகுதியோடு வந்துள்ளது. இருப்பினும், மும்பை அணியினர் இந்தத் தொடரில் தாங்களும் சாம்பியனுக்குத் தகுதியானவர்கள் என்று நிரூபிக்கும் வல்லமையோடுதான் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
16 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago