ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படாதது சிறிது ஏமாற்றமே: யுவராஜ் சிங்

By இரா.முத்துக்குமார்

டி20 அணிக்கு மீண்டும் தேர்வானது மூலம் மகிழ்ச்சி தெரிவித்த யுவராஜ் சிங், ஒருநாள் போட்டிகள் அணியில் தேர்வு செய்யப்படாதது தனிப்பட்ட முறையில் சிறிதளவு ஏமாற்றமளித்தது என்றார்.

தி டெலிகிராப் பத்திரிகையில் அவர் கூறியதாவது, “புதிய தொடக்கம் என்றே கூறுவேன்; இதனால் எனது இந்திய அணியின் கிரிக்கெட் வாழ்வு மீண்டும் தொடங்கியது என்று கூறமாட்டேன். அது 15 ஆண்டுகளுக்கு முன்னதாகத் தொடங்கி விட்டது.

ஆனால், நேர்மையாகக் கூறவேண்டுமெனில், ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்படாதது சிறிதளவு ஏமாற்றமளிக்கிறது. ஆனால் மீண்டும் ஏதோ ஒருவகையில் இந்திய அணிக்குள் நுழைவது மகிழ்ச்சியளிக்கிறது. ஏமாற்றம் தனிப்பட்ட கருத்து, இதில் நான் தவறாக புரிந்து கொள்ளப் படமாட்டேன் என்று நம்புகிறேன், இந்தச் சூழலில் கூறியது திரிக்கப்படமாட்டாது என்று நம்புகிறேன்.

ஆஸ்திரேலியாவில் சூழ்நிலைகள் சவாலாக அமையும், அதுவும் டி20 கிரிக்கெட் மேலும் சவாலானது. இதில் குறைந்த நேரத்தில் நாம் நம்மை தகவமைத்துக் கொண்டு ஆட வேண்டும். டி20 கிரிக்கெட் எளிதானதல்ல. இதைக் கூறும்போதே எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையும் கூறிவிடுகிறேன், ஏனெனில் தன்னம்பிக்கைதான் எனது அடிப்படை குணம். ஓய்வறையில் வீரர்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். எனக்கு தேவையான ஆதரவு கிடைக்கும் என்றே கருதுகிறேன்” என்றார் யுவராஜ் சிங்.

விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் 93, 36, 36, 78 நாட் அவுட், மற்றும் 98 ஆகிய ஸ்கோர்களை அடித்துள்ளார். பஞ்சாப் அணி 6 போட்டிகளில் 5-ல் வென்று காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

“ஒன்றரை ஆண்டுகளாக கிரிக்கெட் ஆட்டத்தில் நான் இல்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆட நம்மை நாமே ஊக்கப்படுத்திக் கொள்வது சற்று கடினமே. ஆனால் அதுதான் ஒரே வழி. நான் 1996-97 முதல் முதல்தர கிரிக்கெட்டில் ஆடினேன் பிறகுதான் 2000-ம் ஆண்டு இந்திய அணியில் நுழைந்தேன்.

ஆம், நல்ல ஒரு தொடர் தேவை என்று கருதினேன், அதற்காக நான் எனது சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. நான் எப்போதும் உள்நாட்டு கிரிக்கெட்டை பெரிதும் மதிப்பவன்” என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார் யுவராஜ் சிங்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்