டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்த ஜேசன் ஹோல்டர்: ஆஸ்திரேலியா 345/3

By இரா.முத்துக்குமார்

மெல்பர்னில் சனிக்கிழமை தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 345 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் ஸ்மித் 32 ரன்களுடனும், ஆடம் வோஜஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 16 பவுண்டரி 1 சிக்சருடன் 128 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கவாஜா 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 144 ரன்கள் எடுத்தார். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 258 ரன்களைச் சேர்த்தனர்.

மெல்போர்னில் இதுவரை டெஸ்ட், ஒருநாள் சதம் காணாத டேவிட் வார்னர், அதற்கான மூடில் இறங்கினார். 5 பவுண்டரிகளை விளாசி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் டெய்லர் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஆட நினைத்தார். ஆனால் ஷாட் ஆடும் போது மட்டை திரும்பியது, இதனால் ஆஃப் திசைக்கு சென்ற கேட்சை ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரிலிருந்து வலது புறம் ஓடி கேட்ச் செய்தார் சாமுயெல்ஸ். ஆனால் படுமோசமான பீல்டிங்குக்காக கடும் விமர்சனத்தைச் சந்தித்து வரும் மர்லான் சாமுயெல்ஸ் இந்தக் கேட்சையும் தட்டித் தட்டி விட்டிருப்பார், கடைசியில் ஒருவழியாக பிடித்துவிட்டார்.

பிறகு உஸ்மான் கவாஜாவுக்கு அவர் கேட்ச் ஒன்றையும் கோட்டை விட்டார். கவாஜா அப்போது 142 ரன்களில் இருந்தார். இருந்தாலும் கைக்கு வந்த கேட்சை விட்டார் சாமுயேல்ஸ். கடைசியில் அவர் டெய்லரின் லெக் திசை பந்தை பிளிக் செய்ய முயன்று ராம்தின்னிடம் கேட்ச் கொடுத்து 144 ரன்களில் வெளியேறினார். சாமுயேல்சின் அணுகுமுறை கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு நிற்பதாக ஹோபார்ட் டெஸ்ட் போட்டியிலேயே விமர்சனம் எழுந்தது. மேலும் ஆட்டத்தில் கவனமில்லாமல் விட்டேத்தி மனோபாவத்துடன் செயல்படுவதாகவும் அவர் மீது கடும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன.

டாஸ் வென்ற ஜேசன் ஹோல்டர் ஓரளவுக்கு பசும்புல் காட்டப்பட்டிருந்த பிட்சில் ஆஸ்திரேலியாவை அவதிக்குள்ளாக்க பீல்டிங் தேர்வு செய்தார் என்பதை விட அத்தகைய பிட்சில் முதலில் பேட் செய்து சடுதியில் ஆல் அவுட் ஆகிவிடுவோம் என்ற பயத்தில்தான் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்திருக்கிறார் என்றே கருத நேரிடுகிறது.

வார்னர் நல்ல வேளையாக அவுட் ஆனார். இல்லையெனில் மே.இ.தீவுகள் நிலைமை இன்னும் பரிதாபமாகியிருக்கும். கவாஜா 50-வது பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தார். ஆனாலும் அவர் நெருக்கடியைச் சந்திக்கவில்லை, களவியூகம் எளிதில் ஒன்று, இரண்டு என்று ரன்களை எடுக்க வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. கவாஜா இந்த நிலையில் டெய்லர் பந்தை எட்ஜ் செய்து கேட்ச் வாய்ப்பு கொடுத்தார், ஆனால் ஜெர்மைன் பிளாக்வுட் அங்கு எச்சரிக்கையாக இல்லை. இது கடினமான வாய்ப்புதான், ஆனால் மே.இ.தீவுகள் இத்தகைய கேட்ச்களை பிடித்தேயாக வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த நிலையிலிருந்து கடைசி 2 மணி நேர ஆட்டத்தின் மத்தியப் பகுதி வரை மே.இ.தீவுகள் பந்து வீச்சு விக்கெட் எடுக்கும் தரத்தில் இல்லை. ஒரு நேரத்தில் பிராத்வெய்ட் ஜெண்டில் ஆஃப் ஸ்பின்னர்களை வீச ஆஃப் திசையில் 7பீல்டர்கள் நிறுத்தப்பட்டனர். பிராத்வெய்ட் மிகவும் வெளியே வீசினார். நடுவர் இருமுறை வைடு என்று அறிவித்தார். கடைசியில் ஒருவழியாக பிராத்வெய்ட் பந்தை மேலேறி வந்து அடிக்கும் முயற்சியில் 128 ரன்களில் ஸ்டம்ப்டு ஆனார் பர்ன்ஸ்.

உஸ்மான் கவாஜா டெய்லர் பந்தில் ராம்தினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஸ்மித் 32 ரன்களுடனும் வோஜஸ் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், இனி அடுத்த விக்கெட் எப்போது விழுமோ?

ஒரு விசித்திர புள்ளிவிவரம்:

இன்று ஜோ பர்ன்ஸ் அவுட் ஆவதற்கு முன்பாக 2 டெஸ்ட் போட்டிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 700 ரன்களை எடுத்தது.

2 டெஸ்ட் போட்டிகளுக்கிடையே என்பதால் இது அதிகாரபூர்வ புள்ளிவிவரக் கணக்கில் சேராது. ஆனால் மே.இ.தீவுகளின் பரிதாப நிலையை சுட்டிக் காட்ட வேண்டுமானால் ஹோபார்ட் டெஸ்ட் போட்டியில் வார்னர் அவுட் ஆகும் போது ஆஸ்திரேலியா 121/3 என்று இருந்தது. அதன் பிறகுதான் ஆடம் வோஜஸ், ஷான் மார்ஷ் இணைந்து டெஸ்ட் சாதனை நிகழ்த்தப்பட்டது, அதன் பிறகு ஷான் மார்ஷ் கடந்த போட்டியில் அவுட் ஆனதன் மூலம் ஒரு விக்கெட், பிறகு தற்போது மெல்போர்னில் வார்னர் அவுட் ஆன வகையில் 2-வது விக்கெட், ஆனால் இடையில் சேர்க்கப்பட்ட ரன்களோ 749! இதுதான் மே.இ.தீவுகள் அணியின் நிலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்