தோனி ஒரு மாஸ்டர்; சிஎஸ்கே மீது மிகப்பெரிய மரியாதை இருக்கு: ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் பணிவு

By ஏஎன்ஐ

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஒரு மாஸ்டர். அவர் வழிநடத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் பணிவுடன் தெரிவி்த்துள்ளார்.

ஐபிஎல் டி20 போட்டியில் லீக் ஆட்டத்தில் கோலி தலைமையிலான ஆர்சிபி அணியுடன், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இன்று பிற்பகலில் மும்பை வான்ஹடே மைதானத்தில் மோதுகிறது.

வலிமையான இரு பெரிய அணிகள் மோதுவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டி தொடங்கும் முன்பே, சமூக வலைத்தளத்தில் இரு அணிகளின் ரசிகர்களும் சூடான கருத்துக்களைக் கூறி விமர்சித்து வருகின்றனர்.

இரு அணிகளிலும் பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் சமபலமாக இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் கோலி படை தொடர்ந்து 4 போட்டிகளில் வென்று பெரும் நம்பிக்கையுடன் இருக்கிறது,

அதேபோல சிஎஸ்கே தொடர்ந்து 3 வெற்றிகளுடன் இருக்கிறது. புள்ளிப்பட்டியலி்ல் முதல் இரு இடங்களில் இருக்கும் அணிகள் மோதுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சைமன் கேடிச்

இந்தச் சூழலில் ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் சைமன் கேடிச் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்அவர் கூறுகையி்ல “ தோனி ஒரு மாஸ்டர் இல்லையா. ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 3 வெற்றிகளுடன் பயணித்து வருகின்றனர்.

டெல்லி அணிக்கு எதிரான பெரிய ஸ்கோரை அடித்துத் தொடங்கினர், அருமையான வீரர்கள் அணியில் உள்ளதால், சிஎஸ்கே அணி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது.

இன்று நடக்கும் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்குஇடையிலான ஆட்டம் பெரிதாக எதி்ர்பார்க்கப்படுகிறது. மும்பையில் ஏற்கெனவே பல நல்ல ஆட்டங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். எந்த அணியையும் சிதைக்கும் வலிமையான பேட்டிங் வரிசை சிஎஸ்கே அணியிடம்இருக்கிறது.அதேநேரம் எங்கள் பந்துவீச்சும் இந்த சீசனில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

ஆர்சிபி வேகப்பந்துவீச்சாளர் கானே ரிச்சார்டஸன் கூறுகையில் “ ஆர்சிபிஅணியில் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிஎஸ்கே அணி விளையாடிய 3 போட்டிகளைப் பார்த்தேன் சிறந்த பேட்டிங் வரிசை இருக்கிறது.

டூப்பிளசிஸ், கெய்க்வாட் நல்ல ஃபார்மில் இருப்பதால், நாங்கள் புதிய திட்டத்துடன் வந்துஅவர்களைத் தடுத்து நிறுத்துவோம். சிஎஸ்கே அணியில் ஏராளமான அனுபவமான வீரர்கள் இருக்கிறார்கள், பல கோப்பைகளை வென்றுள்ளார்கள். ஆதலால், இன்றைய ஆட்டம் சவாலானதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்