ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை (5 முறை) கோப்பையை வென்ற அணி என்ற பெருமை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உண்டு. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் கோப்பையை வெல்ல தீவிரமாகச் செயல்பட்டு வரும் மும்பை அணியைப் பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
ஐபிஎல் தொடரிலேயே அதிக விலைமதிப்புள்ள அணி மும்பை இந்தியன்ஸ்தான். 2008-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.840 கோடி கொடுத்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி இந்த அணியை வாங்கினார்.
2008-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மிக மோசமான தொடக்கத்தைக் கண்டது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்த ஆண்டில் காயம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் தொடரில் இருந்து விலக, ஹர்பஜன் சிங் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளரான ஸ்ரீஷாந்தை தாக்கியதால், அவர் இத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்படி பல சிக்கல்களை எதிர்கொண்ட மும்பை அணியால் முதல் தொடரில் சிறப்பாக ஆட முடியவில்லை.
2013-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து வெற்றி தேவதையின் ஆசிர்வாதம் மும்பை அணிக்கு கிடைத்தது. 2013-ம் ஆண்டுமுதல் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி, 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பை மட்டுமின்றி சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறை வென்றுள்ளது.
கோப்பைகளை வெல்வது மட்டுமின்றி ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, குருனால் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் என பல முன்னணி வீரர்களையும் உருவாக்கி இந்திய கிரிக்கெட்டுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வழங்கியுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago