சிஎஸ்கே அணியின் இதயத்துடிப்பே தோனிதான்: பயிற்சியாளர் பிளெம்மிங் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இதயத்துடிப்பு மகேந்திரசிங் தோனிதான். 200 போட்டிகளுக்கும் மேலாக அவர் இன்னும் விளையாட வேண்டும் என்று சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்சிங் தெரிவித்தார்.

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அபாரமாகப் பந்து வீசிய சிஎஸ்கே வீரர் தீபக் சஹர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தி ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

இந்தப் போட்டி சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடும் 200-வது போட்டியாக அமைந்தது. வெற்றிக்குப்பின் சிஎஸ்கே அணியினர் புைட சூழ, தோனி கேக் வெட்டி, பயிற்சியாளர் பிளெம்மிங் உள்ளிட்டோருக்கு வழங்கினார்.

வெற்றி குறித்து சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறியதாவது:

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியை தோனி தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவர் நீண்டகாலம் ஒரே அணியில் இருந்ததைக் குறிப்பிட்டு பாராட்ட வேண்டும். தோனி இதுவரை சிஎஸ்கே அணிக்காக 200 போட்டிகளில் விளையாடியுள்ளார், இன்னும் சிறப்பாக விளையாட விருப்பமாக இருக்கிறார். அணி நிர்வாகத்துக்கும், கிரி்கெட்டும் பங்களிப்பு செய்ய அவரின் மனநிலை தயாராக இருக்கிறது.

தோனியால் அணி நிர்வாகம் வளர்ந்துள்ளது, அணி நிர்வாகத்தால் தோனியும் வளர்ச்சி கண்டுள்ளார் என நினைக்கிறேன். தோனிக்கும் அணி நிர்வாகத்துக்கும் சிறந்த தொடர்பு, நினைத்தாலே வித்தியாசமாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் இதயத்துடிப்பாக தோனி இருக்கிறார், அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அணியில் சிறப்பாகச் செயல்படுவது, வழிகாட்டுதல், தலைமை என அவரைப் பற்றி குறிப்பிடலாம். முதல் போட்டியில் தோல்வி அடைந்து அடுத்த போட்டியிடலாம் மாபெரும் வெற்றி பெற்றதே தோனிக்கு தலைமைக்கான சாட்சிதான்.

முதல் போட்டிக்குப்பின் 2-வது ஆட்டத்தில் சிறந்த வெற்றி பெற்றதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைந்தேன். தீபக் சஹர் பந்துவீச்சில் சிறிதளவு ஸ்விங், சீம் ஆகியவை இருந்ததில் எந்த சந்தேகமும் இல்லை, சிறப்பாக செயல்பட்டார். முதல் பந்திலிருந்தே பந்தை ஸ்விங் செய்யக்கூடிய திறமையாளராக சஹர் இருக்கிறார். அவரின் கட்டுப்பாடும், திறமையும் உயரத்துக்கு கொண்டு செல்லும்.

எளிமையான திட்டமிடல், ஸ்டெம்ப்பை நோக்கி வீசுதல், ஸ்விங் செய்தல் போன்றவற்றை சரியாக சஹர் செய்தார். முதல் போட்டியில் சுமாராகச் செயல்பட்ட சஹர் 2-வது போட்டியில் சிறப்பாகப் பந்து வீசியுள்ளார்.

எந்தப் போட்டியிலும் டாஸ் மிகவும் முக்கியமானது. முதல் ஆட்டத்தில் லேசான பனி இருந்தது, தூறல் இருந்தது. அதனால், எங்களுக்குச் சாதமாக வாய்ப்பை உருவாக்க முடியவில்லை.

ஆனால் இன்றைய சூழலை எவ்வாறு கையாளப் போகிறார்கள் என்ற சவால் பந்துவீச்சாளர்கள் முன் இருந்தது. லுங்கி இங்கிடிக்கு தனிமை முடிந்துவிட்டது, அடுத்த இரு நாட்களில் அணியில் இணைந்துவிடுவார்.


இவ்வாறு பிளெம்மிங் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்