மும்பையில் இன்று நடக்கும் ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் புதிய மைல்கல் படைக்க உள்ளார்.
மும்பையில் உள்ள வான்ஹடே மைதானத்தில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்ஸன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி. டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி 2 புள்ளிகளுடன் உள்ளது. 2-வது ஆட்டத்தில் இன்று மோதுகிறது.
அதேசமயம், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 222 ரன்களை சேஸிங் செய்யப் புறப்பட்டு 4 ரன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வி அடைந்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் சாம்ஸன் 112 ரன்களில் போராடி கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வலிமையாக இருக்கும் இரு அணிகளும் இன்று மோதுகின்றன.
இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் இன்று ஒரு விக்கெட்டை வீழ்த்திவிட்டால், டி20 போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
தற்போது அஸ்வின் ஐபிஎல் டி20 போட்டிகளில் 139 விக்கெட்டுகளையும், இந்திய அணிக்காக 46 போட்டிகளில் 52 விக்கெட்டுகளையும், மற்ற டி20 விக்கெட்டுகளை உள்நாட்டளவிலும் வீழ்த்தி 249 விக்கெட்டுகளுடன் உள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் டி20 போட்டிகளில் 250 விக்கெட்டுகள் எனும் மைல்கல்லை அஸ்வின் எட்டுவார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக இலங்கை வீரர் லசித் மலிங்கா 170 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து அமித் மிஸ்ரா 160 விக்கெட்டுகளையும், பியூஷ் சாவ்லா 156 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். சிஎஸ்கே வீரர் டுவைன் பிராவோ 154 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து தனிமைப்படுத்திக் கொண்டிருந்த டெல்லி வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா இன்றைய ஆட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஹோட்டல் தனிமைப்படுத்துதலில் இருந்து வந்துள்ள ரபாடா நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். அந்தப் புகைப்படத்தை டெல்லி கேபிடல்ஸ் அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ஆதலால், இன்று நடக்கும் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரபாடா பங்கேற்பார் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago