ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது. அந்த அணியிலிருந்து முக்கிய ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கெயிலுக்கு கேட்ச் பிடிக்கும் போது பென் ஸ்டோக்ஸின் இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் பெரிதாகி விரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
ஏற்கெனவே வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் காயம் காரணமாக விலகியுள்ளது அந்த அணிக்கு பந்துவீச்சில் பெரிய பள்ளத்தை ஏற்படுத்திய நிலையில், பேட்டிங்கில் ஸ்டோக்ஸ் விலகியது பேரிடியாக அமைந்துள்ளது. ஸ்டோக்ஸுக்கு பதிலாக எந்த வீரர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரியவில்லை.
இதுதொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “ பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்தபோது அவரின் இடதுகை விரல்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
» யார் இந்த சேத்தன் சக்காரியா? நடராஜனைப் போல் தடைகளை வென்று சாதித்த ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர்
இதையடுத்து 2020-21 ஐபிஎல் சீசனிலிருந்து ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். ஆனாலும், தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் நீடிப்பார், அணிக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார். ராஜஸ்தான் ராயல்ஸ் குடும்பத்தில் ஸ்டோக்ஸ் மிகவும் மதிப்பு மிக்க வீரர்.அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.
பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்பட்ட காயம் எலும்பு முறிவு என்பது தெரியவந்துள்ளது. ஆனால்,அவரின் காயத்தின் தன்மை என்பது இனிவரும் நாட்களில்தான் தெரியவரும்.
ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் இல்லாத நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெளிநாட்டு வீரர்கள் என்ற வகையில் லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை, முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர் இவர்கள் மூவருமே பந்துவீச்சாளர்கள், டேவிட் மில்லர் பேட்ஸமேன் வரிசையில் உள்ளார்.
பென் ஸ்டோக்ஸ்கிற்கு ஏற்பட்டகாயத்தால், அவரால், நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜூன் மாதம் இங்கிலாந்து அணியில் பங்கேற்க முடியுமா என்றகேள்வி எழுந்துள்ளது.
அதைத் தொடர்ந்து இந்தியா இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது, அதை முடித்துக்கொண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா செல்கிறது. இந்தத் தொடரில் ஸ்டோக்ஸ் பங்கேற்க முடியுமா என்பது அவரின் காயத்தின் தீவிரத்தன்மையைப் பொருத்தே அமையும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
15 hours ago
விளையாட்டு
17 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago