ஜஸ்பிரித் பும்ராவைவிட சில நுணுக்கங்களில் ஷாகீன் அப்ரிடிதான் சிறந்த பந்துவீச்சாளர்: மீண்டும் வம்பிழுக்கும் அக்யுப் ஜாவித் 

By செய்திப்பிரிவு

பந்துவீச்சில் சில நுணுக்கங்களோடு ஒப்பிடுகையில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடிதான் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைவிட சிறந்தவராக இருக்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்யுப் ஜாவித் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த அக்யுப் ஜாவித் சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்திருந்தார். அதில் “ விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆனால், ஆஃப் சைடில் விளையாடுவதில் பலவீனம். ஆதலால், பாகிஸ்தான் வீர்ர பாபர் ஆஸமிடம் ஆப்ஃசைடில் விளையாடுவது குறித்து கற்றுக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

அக்யுப் ஜாவித்தின் இந்தக் கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் கோலியின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பும்ரா குறித்தும் அக்யுப் ஜாவித் பேசியுள்ளார். கிரிக்கெட் பாகிஸ்தான் இணையதளத்துக்கு அக்யுத் ஜாவித் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்திய அணிவேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி இருவருமே சிறந்த பந்துவீச்சாளர்கள்தான். டெத் ஓவர் வீசுவதில் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என்பதில் மறுப்பதற்கில்லை, அதேநேரம், புதிய பந்தில் அவர் சிறப்பாகப் பந்துவீசசுவதில்லை. ஆனால், புதிய பந்தில் ஷாகீன் அப்ரிடி அருமையாகப் பந்துவீசக்கூடியவர், நுணுக்கங்களோடு பந்துவீசுவதில் பும்ராவைவிட அப்ரிடி சிறந்தவர்.

ஆனால்,பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு போட்டியிலும் அப்ரிடியை களமிறக்கி அவருக்கு அநீதி இழைக்கிறது. ஷாகீன் அப்பிரிடியின் பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். ஒரு தொடரை இழந்துவிட்டால், அடுத்த தொடரில் அப்ரிடிக்கு ஓய்வு அளிக்க வேண்டும், சுழற்ச்சி முறையில் வீரர்களை விளையாட வைக்க வேண்டும். எந்தெந்தப் போட்டி முக்கியமானதோ அந்தப் போட்டிகளில் மட்டும்தான் அப்ரிடி விளையாட வேண்டும்”

இவ்வாறு ஜாவித் தெரிவித்தார்.

அக்யுப் ஜாவித்

புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால், இருவருமே கடந்த 2018-ம் ஆண்டுதான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளனர். அப்ரிடியைவிட அதிகமான டெஸ்ட் போட்டிகளில் பும்ரா விளையாடியுள்ளார்.

37 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா 87 விக்கெட்டுகளை வீழ்த்தி 22.1 சராசரி வைத்துள்ளார். அதேநேரத்தில் அப்ரிடி 48 டெஸ்ட் விக்கெட்டுகளை 23 டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். சராசரியாக 32.3 வைத்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து பும்ரா 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தி, 4.64 சராசரி வைத்துள்ளார். ஆனால், அப்ரிடி 24 போட்டிகளில் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி 5.47 சராசரி வைத்துள்ளார்.

டி20 போட்டிகளில் கடந்த 2018லிருந்து 17 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை பும்ரா வீழ்த்தியுள்ளார். அப்ரிடி 20 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

13 hours ago

விளையாட்டு

16 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்