ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதுதான் முக்கியமே தவிர, முதல்போட்டியில் வெல்வதும், தோற்பதும் முக்கியமல்ல என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கோலிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆர்சிபி அணி.
முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 வி்க்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது
வெற்றிக்குப்பின் பேட்டி அளித்த ஆர்சிபி கேப்டன் கோலி, “ கடந்த ஆண்டும் முதல் போட்டியில் வெற்றி பெற்று, வெற்றியுடன் தொடங்கினோம், இந்த ஆண்டும் வெற்றியுடன் தொடங்கியிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
» இவருக்காக ரகசியமாக ஐபிஎல் ‘லோகோவை டிசைன்’ செய்திருப்பார்களோ?- டிவில்லியர்ஸை வியந்த சேவாக்
» மிரட்டிவிட்டார்…மும்பை இந்தியன்ஸ் அணியினர் பயந்துட்டாங்க: விராட் கோலி கிண்டல்
இதற்கு பதில் அளித்து மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹிச் சர்மா கூறுகையில் “ ஐபில் டி20 தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதுதான் முக்கியம். முதல் போட்டியில் வெல்வதும், தோல்வி அடைவதும் முக்கியமல்ல என நினைக்கிறேன். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் இடையே நல்லவிதமாக அமைந்தது, யாரும் எளிதாக வெற்றியை விட்டுக்கொடுக்கவில்லை. நாங்கள் மகிழ்ச்சி அடையும் அளவுக்கு எதிர்பார்்்த்த அளவுக்கு நல்ல ஸ்கோரை நாங்கள் எடுக்கவில்லை. 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம்.
சில தவறுகளை பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் செய்திருக்கிறோம். அதைக் கடந்து அடுத்தப் போட்டிக்குச் செல்ல வேண்டும். கடைசி 4 ஓவர்களில் டிவில்லியர்ஸ், கிறிஸ்டியன் களத்தில் இருந்தபோது, ஆட்டம் எங்கள்பக்கம்தான் இருந்தது.
இருவரையும் ஆட்டமிழக்கச் செய்யத்தான் பும்ராவையும், போல்ட்டையும் பயன்படுத்தினேன். ஆனால், உண்மையில் சேப்பாக்கம் ஆடுகள் பேட்டிங் செய்வதற்கு எளிதானது அல்ல. பந்து மெதுவாக பேட்ஸ்மேனை நோக்கி வருகிறது.
டிவில்லியர்ஸ் சிறப்பாக பேட் செய்தார். எங்களால் துபாயில் இருந்ததைப் போன்று குழுவாக இருக்க முடியவில்லை, துபாயில் ஒருமாதம் முன்பே நாங்கள் தொடருக்கு தயாராகினோம். இங்கு எல்லாமே நேர் எதிராக இருக்கிறது.
இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago