வரலாற்றில் முதன்முறையாக இந்தியாவை சேர்ந்த 4 பாய்மர படகு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச் சுற்று பாய்மர படகு போட்டி ஓமனில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று முன்தினம் மகளிருக் கான லேசர் ரேடியல் பிரிவில் சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் 30 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது இடம் பிடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.
இந்நிலையில் நேற்று ஆடவருக்கான லேசர் ஸ்டாண்டர்டு கிளாஸ் பிரிவில் இந்தியாவின் விஷ்ணு சரணவன் ஒட்டுமொத்தமாக 53 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடம் பிடித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். இதைத் தொடர்ந்து 49இஆர் கிளாஸ் பிரிவில் இந்தியாவின் கணபதி செங்கப்பா, வருண் தக்கார் ஜோடி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.
இதற்கு முன்னர் பாய்மர படகு போட்டியில் அதிகபட்சமாக 2 இந்தியர்கள், 4 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஆனால் இவர்கள் ஒரே பிரிவு போட்டியில்தான் கலந்து கொண்டனர். இந்தியாவின் பரோக் தாராபூர், துருவ் பண்டாரி ஆகியோர் 1984 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர். தொடர்ந்து 1988 ஒலிம்பிக்கில் பரோக் தாராபூர், கெல்லி ராவ் கலந்து கொண்டனர். 1992 ஒலிம்பிக்கில் பரோக் தாராபூர், சைரஸ் காமா ஆகியோரும், 2004 ஏதன்ஸ் ஒலிம்பிக்கில் மலாவ் ஷிராஃப், சுமித் படேல் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில் மலாவ், ஸ்மித் ஆகியோர் 49இஆர் கிளாஸ் ஸ்கிஃப் பிரிவில் கலந்து கொண்டனர். மற்ற அனைவரும் 470 கிளாஸ் பிரிவு போட்டியில் பங்கேற்றிருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago