பாகிஸ்தானுடன் கிரிக்கெட் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போதே பாதியிலேயே வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்புவது வியப்பாக இருக்கிறது என தென் ஆப்பிரிக்க வாரியத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு பாகிஸ்தான் அணியின் பயணம் மேற்கொண்டிருந்தனர். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நேற்று முடிந்தது. இந்தத் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ஆனால், இந்தத் தொடர் முடியும் முன்பே தென் ஆப்பிரி்க்க வீரர்கள், குயின்டன் டீ காக், ரபாடா, ஆன்ரிச் நார்ஜே, கிறிஸ் மோரிஸ் ஆகியோரை ஐபிஎல் தொடரில் விளையாட இந்தியாவுக்குச் செல்ல தென் ஆப்பிரி்க்க வாரியம் அனுமதித்தது.
இதைச் சுட்டிக்காட்டி பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, பாகிஸ்தான் அணியைவிட இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் முக்கியமானதா என்ற ரீதியில் விமர்சித்துள்ளார்.
அப்ரிடி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடந்து கொண்ட விதம் எனக்கு வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியுடன் தென் ஆப்பிரிக்க அணி ஒருநாள் தொடர் விளையாடி வருகிறது. ஆனால், தொடர் முடியும் முன்பே பாதியிலேயே முக்கிய வீரர்களை ஐபிஎல் தொடருக்காகச் செல்ல வாரியம் அனுமதித்தது வியப்பாக இருக்கிறது.
இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுபோன்ற விஷயங்கள் நல்லதல்ல, இதை மறுஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago