ஆர்சிபி அணியின் ஜெர்சியுடன் உசைன் போல்ட்

By செய்திப்பிரிவு

உலகப் புகழ்பெற்ற தடகள வீரர் உசைன் போல்ட், ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் ஆடையை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

14-வது ஐபிஎல் சீசன் நாளை தொடங்க உள்ளது. போட்டிகளுக்கு ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் தடகள வீரர் உசை போல்ட்டின் பதிவு ட்ரெண்டாகி வருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஆடையை அணிந்துகொண்டு உசேன் போல்ட் தனது ட்விட்டர் பக்கத்தில், “சேலஞ்சர்ஸ்... நான் உங்களுக்கு ஒன்றைத் தெரியப்படுத்துகிறேன். நான் இன்னும் வேகமான பூனைதான்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு ஆர்சிபி அணியினர் பதிலளித்துள்ளனர். அந்த அணியின் கேப்டன் கோலி, “எங்களுக்குத் தெரியும். அதனால்தான் எங்கள் அணியில் நீங்கள் இருக்கிறீர்கள்” என்றும் பதிவிட்டிருந்தார்.

அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ், “சில கூடுதல் ரன்கள் தேவைப்படும்போது யாரை அழைப்பது என்பது எங்களுக்குத் தெரியும்!” என்று பதிலளித்தார்.

கரோனா அச்சம்

ஐபிஎல் தொடரில் உள்ள 8 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில் வீரர்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது ஐபிஎல் நிர்வாகத்துக்குக் கவலையை அளித்துள்ளது.

இந்த நிலையில், “கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைப் பார்த்தால், பாதிப்பிலிருந்து வீரர்களைக் காக்க ஒரே வழி அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதுதான்” என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

12 hours ago

விளையாட்டு

14 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

மேலும்