நான் 'பவர் ஹிட்டர்' இல்லை; ஆனால், திராவிட்டின் அறிவுரை கைகொடுக்கும்: புஜாரா வெளிப்படைப் பேச்சு

By பிடிஐ

''நான் பவர் ஹிட்டர் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரிடம் இருந்து பவர் ஷாட்களை எவ்வாறு அடிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்ள முடியும். திராவிட்டின் அறிவுரையும் உதவும்'' என்று சிஎஸ்கே வீரர் சத்தேஸ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டி ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் என்று பெயரெடுத்தவர், ஓரம் கட்டப்பட்டவர் சத்தேஸ்வர் புஜாரா. அதிரடியான ஆட்டங்கள், பவர் ஷாட்கள் அடிக்கும் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு புஜாரா ஒத்துவரமாட்டார் என்று கருதி அவரை பிசிசிஐ நிர்வாகம் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் ஒதுக்கியது.

கம்மினஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஸ்டெயின், ஆன்டர்ஸன் எனப் பலநாட்டுப் பந்துவீச்சாளர்களையும் வெறுப்பேற்றும் விதமாகக் களத்தில் தூணாக நின்று பேட் செய்யக்கூடியவர் புஜாரா என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், டி20 போட்டிகளுக்கு இவரின் பேட்டிங் ஸ்டைல் ஒத்துவருமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

பல ஆண்டுகளாக ஐபிஎல் ஏலத்தில் புஜாராவின் பெயர் அறிவிக்கப்படும். எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்கத் தயாரில்லை. ஆனால், இந்த முறை சிஎஸ்கே அணி நிர்வாகம் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு புஜாராவை வாங்கியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் புருவத்தை உயரத்தியது. இவரை வைத்து சிஎஸ்கே கேப்டன் தோனி என்ன செய்யப்போகிறார் என்று கேள்வி எழுப்பினார்கள். ஸ்ட்ரைக் ரேட் இல்லை, பவர் ஹிட்டிங் ஷாட் அடிக்கும் அனுபவம் இல்லை, பரபரப்புக்கு ஏற்ப அடித்து ஆடும் பேட்ஸ்மேன் இல்லை எவ்வாறு களத்தில் புஜாரா செயல்படப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் சத்தேஸ்வர் புஜாரா பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

''டி20 போட்டி என்றாலே ஸ்ட்ரைக் ரேட் வேண்டும். உண்மையில் எனக்கு அந்த ஸ்ட்ரைக் ரேட் இல்லை. நான் பவர் ஹிட்டர் பேட்ஸ்மேன் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரத்தில், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரிடமிருந்து நான் கற்றுக்கொள்வேன். நான் சிறந்த பவர் ஹிட்டர் இல்லை என்றாலும் பந்தைச் சரியான டைமிங்கில் அடிக்கும் திறமை இருக்கிறது

நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன், இதற்கு மிகப்பெரிய உதாரணம். சாதாரண பேட்ஸ்மேனாக அணிக்குள் வந்து, இன்று 3 பிரிவுகளிலும் ஆடக்கூடிய சிறந்த பேட்ஸ்மேனாக மாறியுள்ளார். கேன் வில்லியம்ஸன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோ வீரர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். இந்த வீரர்கள் ரன் ஸ்கோர் செய்வதற்குத் தேவையான ஷாட்களையும் ஆடுவார்கள். அதே நேரத்தில் புதுமையான ஷாட்களையும் அடிப்பார்கள்.

எனக்கும் அதே மனநிலை இருக்கிறது. நான் வெற்றி பெற விரும்பினால், நானும் வித்தியாசமான ஷாட்களை ஆட வேண்டும். அதே நேரத்தில், சரியான ஷாட்களை ஆடி ரன்களையும் சேர்க்க வேண்டும். அதற்கு அதிகமான சக்தியை வெளிப்படுத்தி அடிக்க வேண்டும். சரியான ஷாட்களை ஆடுவதற்குச் சரியான பந்துகளைத் தேர்ந்தெடுக்கும் பக்குவம் தேவை.

இவை எல்லாம் அனுபவத்தின் மூலம்தான் வரும். நான் கடந்த காலங்களில் டி20 தொடர் விளையாடியபோது, என் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடும் எனச் சிறிது கவலைப்பட்டேன். தொழில்நுட்ப ரீதியாகச் சில தவறுகளைச் செய்ததால், நான் ஐபிஎல் தொடரை விட்டு ஓரங்கட்டப்பட்டேன்.

ஆனால், இப்போது, அதைக் கடந்துவிட்டேன். என்னுடைய இயல்பான ஆட்டம் எது, வலிமை எது என்பதை இந்தக் காலகட்டத்தில் உணர்ந்துவிட்டேன். இனிமேல் என்னை அனுப்ப முடியாது.

இந்த அறிவுரைகளை நான் திராவிட்டிடம் நீண்ட காலத்துக்கு முன்பு பெற்றேன். உங்களின் இயல்பான ஆட்டம் உங்களை விட்டு எப்போதும் செல்லாது. ஆதலால், வித்தியாசமான ஷாட்களை ஆடிப் பழகுங்கள் என்று திராவிட் அறிவுரை கூறினார்.

ஆதலால், நான் டி20 போட்டி விளையாடிவிட்டு, டெஸ்ட் தொடருக்குப் போனாலும், என்னால் அதற்கு ஏற்ப மாற முடியும். டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டு, டி20 தொடருக்கு வந்தாலும் என்னால் அதற்கு ஏற்ப பேட் செய்ய முடியும். நாம் என்ன விளையாடுகிறோம் என்பதைப் புரிந்துகொண்டால் போதும்''.

இவ்வாறு புஜாரா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்