அடிலெய்ட் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டம் மற்றும் பிங்க் நிறப் பந்து ஆகிய புதுமைகளுடன் விறுவிறுப்பான முறையில் ஆஸ்திரேலிய வெற்றியில் முடிந்துள்ளது.
நியூஸிலாந்து தன் 2-வது இன்னிங்சில் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜோஷ் ஹேசில்வுட் அதி அற்புதமாக ஸ்விங் பந்துக் கலையை பயன்படுத்தி 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனையடுத்து 187 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 66/3 என்று தடுமாறி, பிறகு ஷான் மார்ஷ் (49), வார்னர் (35), மிட்செல் மார்ஷ், ஆடம் வோஜஸ் ஆகியோரது சிறுபங்களிப்புகளுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது.
இந்த தொடர் முழுதும் சரியாக வீசாத டிரெண்ட் போல்ட் இன்று அருமையான ஸ்விங் பந்து வீச்சில் 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தினார். 225-250 ரன்கள் இலக்கு என்றால் ஆஸ்திரேலியா நிச்சயம் மண்ணைக் கவ்வியிருக்கும், ஆனால் நடுவர்கள் எஸ்.ரவி மற்றும் நைஜல் லாங் ஆகியோரின் ஆஸ்திரேலிய சாதக நேதன் லயன் தீர்ப்பினால் நியூஸிலாந்து தோல்வி தழுவியது என்றே கூற வேண்டும்.
மொத்தம் 123,736 ரசிகர்கள் இந்த 3 நாட்களில் மைதானத்துக்கு வருகை தந்துள்ளமை, பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டிகளுக்கான பிரகாசமான எதிர்காலத்தை அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஆஷஸ் அல்லாத டெஸ்ட் போட்டி ஒன்றில் அடிலெய்டில் இது சாதனைக் வருகைப் பதிவு என்று கூறப்படுகிறது.
3-ம் நாளான இன்று 116/5 என்று தொடங்கிய நியூஸிலாந்து அடுத்த 5 விக்கெட்டுகளை இழந்து மேலும் 92 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் 3 விக்கெட்டுகளை ஹேசில்வுட் கைப்பற்றினார்.
வாட்லிங் தனது நேற்றைய ஸ்கோரான 7 ரன்களில் ஹேசில்வுட் பந்து வீச்சில் 2-வது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அறிமுக வீரர் சாண்ட்னர் 5 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 45 ரன்களுக்கு அருமையாகவே ஆடினார்.
மார்க் கிரெய்க் 15 ரன்களில் ஹேசில்வுட்-எட்ஜ்-நெவில் கூட்டணியில் ஹேசில்வுட்டின் 5-வது விக்கெட்டாக பெவிலியன் திரும்பினார். 45 ரன்கள் எடுத்த சாண்ட்னர், லயனின் அருமையான கணிப்பினால் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ் பந்தில் சவுத்தி 13 ரன்களில் அவுட் ஆனார். பிரேஸ்வெல் 27 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். தேநீர் இடைவேளைக்கு முன்னதாக போல்ட்டை பவுல்டு செய்த ஹேசில்வுட் 6-வது விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இதனையடுத்து 187 ரன்கள் தேவைப்பட்டது வெற்றிக்கு. வார்னர், ஜோ பர்ன்ஸ் இறங்கினர். பர்ன்ஸ் போல்ட்டிடம் 11 ரன்களில் எல்.பி.ஆனார். அடுத்ததாக வார்னர் (35), ஸ்மித் (14) ஆகியோர் 7 பந்துகள் இடைவெளியில் பிரேஸ்வெல், போல்ட் ஆகியோரிடம் வெளியேற 66/3 என்று ஆனது ஆஸ்திரேலியா. பிறகு வோஜஸ் (28), ஷான் மார்ஷ் (49) இணைந்து மேலும் 49 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வோஜஸின் ஸ்விங் பந்து வீச்சுக்கு எதிரான துயரத்தை போல்ட் முடிவுக்குக் கொண்டு வந்தார். மிட்செல் மார்ஷ் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து சாண்ட்னரிடம் வீழ்ந்தார்.
ஸ்கோர் 176 ஆக இருந்த போது ஷான் மார்ஷ் 49 ரன்களில் போல்ட் பந்தை எட்ஜ் செய்து டெய்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசியில் நெவில் 10 ரன்களில் போல்ட்டிடம் வெளியேற வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் மிட்செல் ஸ்டார்க் இறங்கினார், ஆனால் பீட்டர் சிடில் (9) நேராக ஒரு டிரைவ் அடித்து வெற்றி ரன்களை எடுத்தார்.
வரலாற்றுப் புகழடைந்த இந்த முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலிய வெற்றியில் 3 நாட்களில் முடிந்தது. ஆஸ்திரேலியா தொடரை 2-0 என்று கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக ஹேசில்வுட்டும், தொடர் நாயகனாக வார்னரும் தேர்வு செய்யப்பட்டனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
18 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago