ஐசிசி ஒருநாள் தரவரிசை: கடந்த 4 ஆண்டுகளுக்குப் பின் புவனேஷ்வர் சிறப்பான முன்னேற்றம்

By ஏஎன்ஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் பந்துவீச்சாளர்கள் வரிசையில், இந்திய வீரர் புவனேஷ்வர் குமார், கடந்த 4 ஆண்டுகளுக்குப் பின் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட புவனேஷ்வர் குமார், கடைசி ஆட்டத்தில் 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமானார்.

இதையடுத்து பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் புவனேஷ்வர் குமார் 9 இடங்கள் நகர்ந்து, 11-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தரவரிசையில் 10-வது இடத்தை புவனேஷ்வர் குமார் பெற்றார். அதன்பின் தரவரிசையில் சிறந்த இடத்தை இப்போதுதான் பெற்றுள்ளார்.

இந்தியப் பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 93-வது இடத்திலிருந்து 80-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நியூஸிலாந்து, வங்கதேசம், இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் முடிவில் பல்வேறு மாற்றங்கள் தரவரிசையில் ஏற்பட்டுள்ளன.

இந்திய வீரர் கே.எல்.ராகுல் இங்கிலாந்துக்கு எதிராக சதம், அரை சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன் தரவரிசையில் 31-வது இடத்திலிருந்து 27-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹர்திக் பாண்டியா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்ததாக 42-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார். ரிஷப் பந்த் டாப் 100 பேட்ஸ்மேன்கள் வரிசைக்குள் நுழைந்துள்ளார்.

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 295 புள்ளிகளுடன் 4 இடங்கள் நகர்ந்து 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 796 புள்ளிகளுடன் தொடர்ந்து 7-வது இடத்தில் நீடிக்கிறார். மொயின் அலி, 9 இடங்கள் நகர்ந்து, 46-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

நியூஸிலாந்து பந்துவீச்சாளர் மேட் ஹென்றி 691 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 3-வது இடத்தில் 690 புள்ளிகளுடன் இருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

வங்கதேசப் பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 668 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்