டாஸ் வென்றது இங்கிலாந்து; இந்திய அணியில் ஒரு மாற்றம்: பிட்ச் எப்படி?

By செய்திப்பிரிவு

புனேவில் நடந்துவரும் இந்திய அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது இங்கிலாந்து அணி.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பகலிரவு ஆட்டமாக புனேவில் நடந்து வருகிறது. டெஸ்ட் போட்டியை 1-3 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-3 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்ற நிலையில் ஒருநாள் தொடரை எதிர்கொண்டு வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியாவை வென்றது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் வெற்றியாளரை முடிவு செய்யும் 3-வது ஆட்டம் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் ஜாஸ் பட்லர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. குல்தீப் யாதவுக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் டாம் கரனுக்குப் பதிலாக மார்க் உட் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆடுகளம் எப்படி?

கடந்த 2 போட்டிகளைப் போன்றே ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும். எப்படிச் சொல்ல முடியும் என்றால், முதலில் பேட் செய்யும் அணிக்கு ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கும். சேஸிங் செய்யும் அணிக்கு மிக மிக ஒத்துழைக்கும் என்று கூறலாம்.

ஆடுகளத்தில் நன்றாகப் புற்கள் படர்ந்தும், கடினமாக இருப்பதால், பந்து பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வரும் என்பதால் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருக்கும். சுழற்பந்துவீச்சுக்கு வேலையிருக்காது. சுழற்பந்துவீச்சு மணிக்கு 90 கி.மீ. வேகத்துக்குக் குறைவாகவும், மிதவேகப்பந்துவீச்சாக மணிக்கு 125 கி.மீ. வரை இருந்தால், நன்றாக ஆடுகளம் ஒத்துழைக்கும்.
ஆனால், லைன்-லென்த்தில் பந்துவீச்சாளர்கள் வீசுவது அவசியம் லென்த் தவறி வீசினால், பந்தை சிக்ஸர், பவுண்டரி எல்லையில்தான் தேட வேண்டும். சேஸிங் செய்ய எளிதாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்