புனேயில் நடந்துவரும் இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது இங்கிலாந்து அணி.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையியான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பகலிரவு ஆட்டமாக புனேவில் நடந்து வருகிறது. டெஸ்ட் போட்டியை 1-3 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-3 என்ற கணக்கிலும் இந்திய அணி வென்ற நிலையில் ஒருநாள் தொடரை எதிர்கொண்டு வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2வது ஆட்டம் இன்று தொடங்குகிறது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து கேப்டன் மோர்கனுக்கு கையில் காயம் ஏற்பட்டதையடுத்து, அவருக்குப் பதிலாக ஜாஸ் பட்லர் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மோர்கனுக்குப் பதிலாக டேவிட் மலான், சாம் பில்லிங்ஸுக்குப் பதிலாக லிவிங்ஸ்டோன், மார்க் உட்டுக்கு பதிலாக டாப்ளே ஆகியோர் வந்துள்ளனர்
இந்திய அணியில் காயமடைந்த ஸ்ரேயாஸ் அய்யருக்கு சூர்யகுமார் யாதவ் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டு்ள்ளார். இந்திய அணியில் இரு விக்கெட் கீப்பர்கள்தேவையற்றது, ஏற்கெனவே கே.எல்.ராகுல் இருக்கும் போது ஏன் ரிஷப்பந்த் சேர்க்கப்பட்டார் எனத் தெரியவில்லை. அதற்குபதிலாக சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கலாம். வேகப்பந்துவீச்சுதான் ஆடுகளத்தில் எடுக்கும் நிலையில் குல்தீப் யாதவுக்கு பதிலாக நடராஜன் அல்லது முகமது சிராஜ் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
ஆடுகளம் எப்படி?
முதல் போட்டியைப் போன்றே ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும். ஆடுகளத்தில் நன்றாக புற்கள் படர்ந்தும், கடினமாக இருப்பதால், பந்து பேட்ஸ்மேனை நோக்கி வேகமாக வரும் என்பதால் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருக்கும். ஆனால், லைன்-லென்த்தில் பந்துவீச்சாளர்கள் வீசுவது அவசியம். முதல் போட்டியைப் போன்று சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளம் ஒத்துழைக்காது. 2-வது பந்துவீசும்போது, பனி இல்லாத நிலையில், பந்து நன்றாக ஸ்விங் ஆகும். பந்துவீசுவதிலும் சிரமம் இருக்காது, சேஸிங் செய்யவும் முடியும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago
விளையாட்டு
5 days ago