ஐசிசி டி20 தரவரிசை: கோலி, ரோஹித் திடீர் முன்னேற்றேம்

By பிடிஐ

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டி20 தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் கோலி, துணை கேப்டன் ரோஹித் சர்மா இருவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் கோலி, ரோஹித் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்கி 52 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்தார். இதையடுத்து, டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் கோலி 762 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், 34 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்ததன் மூலம் ரோஹித் சர்மா 613 புள்ளிகளுடன் 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 5 இடங்கள் நகர்ந்து வாழ்வில் சிறப்பான வகையில் 26-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். சூர்யகுமார் யாதவ் 66-வது இடத்தில் உள்ளார். ரிஷப் பந்த் 11 இடங்கள் நகர்ந்து 69-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 5-வது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்றார். இதையடுத்து, 21 இடங்கள் நகர்ந்து 24-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஹர்திக் பாண்டியா 47 இடங்கள் நகர்ந்து 78-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் 892 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஜாஸ் பட்லர் ஒரு இடம் நகர்ந்து 18-வது இடத்தைப் பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்களில் லெக் ஸ்பின்னர் அதில் ரஷித் ஒரு இடம் நகர்ந்து 4-வது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஜோப்ரா ஆர்ச்சர் 12 இடங்கள் நகர்ந்து 22-வது இடத்தையும், மார்க் உட் 12 இடங்கள் நகர்ந்து 27-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

ஒருநாள் தரவரிசையில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ தனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பாக 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கேப்டன் மோர்கன் ஒரு இடம் நகர்ந்து 24-வது இடத்துக்கும், பென் ஸ்டோக்ஸ் 64-வது இடத்துக்கும் நகர்ந்துள்ளனர்.

இந்திய வீரர் ஷிகர் தவண் 98 ரன்கள் விளாசியதையடுத்து, இரு இடங்கள் நகர்ந்து 15-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் 5 இடங்கள் நகர்ந்து, டாப் 20 வரிசைக்குள் நுழைந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்