இந்திய அணியுடன் வரும் 23-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் 2-3 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் வரும் 23, 26, 28 ஆகிய தேதிகளில் முதல் புனே நகரில் நடக்கிறது.
ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் 19 வீரர்கள் கொண்ட இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் பும்ரா, ஷமி, ரவிந்திர ஜடேஜா, மயங்க் அகர்வால் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு இல்லை. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
» ஒருநாள் தொடரிலும் இல்லை? ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவது சந்தேகம்
இந்நிலையில் 23-ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்கும் நிலையில் இங்கிலாந்து அணி நிர்வாகம் அணி வீரர்களை அறிவிக்காமல் இருந்த நிலையில் இன்று அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார். ஆர்ச்சருக்கு முழங்கையில் ஏற்பட்டுள்ள காயம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்துக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை தொடர்ந்து விளையாடும் அளவுக்கு இல்லை என்பதால் ஆர்ச்சர் நீக்கப்பட்டுள்ளார்.
டெஸ்ட் போட்டி கேப்டன் ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் இருவரும் சேர்க்கப்படவில்லை. 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய இங்கிலாந்து அணியில் 9 வீரர்கள் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்றுள்ளனர்.
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், கூடுதலாக இரு சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். லெக் ஸ்பின்னர் மாட் பார்க்கின்ஸன், ஆஃப் ஸ்பின்னர் லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்.
பேட்டிங் வரிசையில் ஜோ ரூட்டுக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். பலமுறை வாய்ப்பை வீணடித்த நிலையில் மீண்டும் பில்லிங்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லே சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுதவிர காத்திருப்பு வீரர்களாக ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மாலன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். எந்த வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டால், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் இவர்களில் ஒருவர் களமிறங்குவர்.
இங்கிலாந்து ஒரு நாள் அணி விவரம்:
மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், ஜேஸன் ராய், மொயின் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளே, அதில் ரஷித், மாட் பார்க்கின்ஸன், மார்க் உட்.
காத்திருப்பு வீரர்கள்: ஜேக் பால், கிறிஸ் ஜோர்டன், டேவிட் மலான்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago