டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 8 தொடர்களில் தோல்வியே காணாமல் வலம் வந்த இங்கிலாந்து அணியின் வெற்றி நடைக்கு பிரேக் போட்டுள்ள இந்திய அணி, தன்னுடைய வெற்றியைத் தொடர்ந்து வருகிறது.
அகமதாபாத்தில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 36 ரன்களில் வென்று, டி20 தொடரைக் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக புவனேஷ்வர் குமாரும், தொடர் நாயகனாக விராட் கோலியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்தத் தொடர் குறித்த சில சுவாரஸ்யமான புள்ளிவிவரங்களைப் பார்க்கலாம்.
1. இங்கிலாந்து அணி 2018 அக்டோபர் 27-ம் தேதி இலங்கைக்கு எதிரான டி20 தொடர் வெற்றியிலிருந்து தொடர்ந்து 8 தொடர்களைக் கைப்பற்றியது. கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20 தொடரை வென்றது. 8 தொடர்களை வென்று வெற்றி நடை போட்ட இங்கிலாந்து அணியை இந்திய அணி பிரேக் போட்டு நிறுத்தியுள்ளது. கடைசியாக 2018-ம் ஆண்டி இந்திய மண்ணில் இந்தியாவிடம் டி20 தொடரை இங்கிலாந்து இழந்து இந்த முறையும் பறிகொடுத்துள்ளது.
» ஒருநாள் தொடரிலும் இல்லை? ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விளையாடுவது சந்தேகம்
2. இந்திய அணி 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தொடர்ந்து 7 டி20 தொடர்களை வென்ற நிலையில், நேற்று 8-வது டி20 தொடரையும் கைப்பற்றியது. இங்கிலாந்து அணிக்கு 8-வது டி20 தொடரோடு முற்றுப்புள்ளி வைத்த இந்திய அணி, 8-வது தொடர் வெற்றிக்குள் நகர்ந்துள்ளது.
3. இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்ததே டி20 போட்டியில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி சேர்த்த அதிகபட்சமாகும். இதற்கு முன் 2010-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் இந்திய அணி சேர்த்ததே அதிகபட்சமாக இருந்தது.
4. விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் 7-வது டி20 தொடர் நாயகன் விருதை வென்றார். டி20 வரலாற்றில் இதுவரை எந்த நாட்டு வீரரும் 7 தொடர் நாயகன் விருதுகளைப் பெற்றதில்லை. அதிகபட்சமாக 4 விருதுகளை பாபர் ஆஸம், முகமது ஹபிஸ் மட்டுமே பெற்றுள்ளனர்.
5. டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் சேர்த்த வீரர்களில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்து ஒரு வீரர் மட்டுமே உள்ளார். தற்போது ரோஹித் சர்மா 2,864 ரன்களுடன் 2-வது இடத்தில் உள்ளார். நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் (2,839) சாதனையை நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் முறியடித்தார். அதிகமான பவுண்டரி அடித்த எண்ணிக்கையில் ரோஹித் (254) 2-வது இடத்திலும், சிக்ஸர் அடித்த எண்ணிக்கையில் (133) 2-வதுதாக ரோஹித் உள்ளார்.
6. டி20 கிரிக்கெட் உலகில் விராட் கோலி அடித்த ரன்கள் அல்லது அரை சதங்கள் அளவுக்கு உலகில் எந்த நாட்டு அணியின் கேப்டனும் இதுவரை அடிக்கவில்லை. கேப்டன் என்ற வரிசையில் ஆஸி.யின் ஆரோன் பின்ச்சின் 1,462 ரன்கள் சாதனையையும் முறியடித்த கோலி, அரை சதம் அடித்த எண்ணிக்கையில் நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்ஸனின் 11 அரை சதங்களையும் முறியடித்து 12 அரை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
7. டி20 போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையை இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் பெற்றார். 24 இன்னிங்ஸ்களில் டேவிட் மலான் இந்தச் சாதனையை எட்டினார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆஸம் 26 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டியிருந்தார். அதை மலான் முறியடித்தார்.
8. இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர், டேவிட் மலான் 2-வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்ததே டி20 சேஸிங்கில் 2-வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட 2-வது அதிகபட்சமாகும்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
12 hours ago
விளையாட்டு
14 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago