சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம், டெஸ்ட் மற்றும் டி20 போட்டித் தரவரிசையில் 5-வது இடம் என முதல் 5 இடங்களுக்குள் இருக்கும் ஒரே வீரர் விராட் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் கோலி 2-வது மற்றும் 3-வது ஆட்டத்தில் 73, 77 ரன்கள் எடுத்து 47 புள்ளிகளுடன் மீண்டும் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் 83 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் 5 இடங்கள் நகர்ந்து, 19-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2018-ம் ஆண்டு கடைசியாக 17-வது இடத்தை அடைந்ததுதான் பட்லரின் சிறப்பான தரவரிசையாகும்.
இந்திய அணி வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் 32 இடங்கள் நகர்ந்து 31-வது இடத்துக்கும், ரிஷப் பந்த் 80-வது இடத்துக்கும், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 11-வதுஇடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் 14 இடங்கள் நகர்ந்து 27-வது இடத்தையும், புவனேஷ்வர் குமார் 7 இடங்கள் நகர்ந்து 45-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ 3-வது டி20 போட்டியில் 40 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இரு இடங்கள் நகர்ந்து 14-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 43 இடங்கள் முன்னேறி 34-வது இடத்துக்கும், மார்க் உட் 59 இடங்கள் நகர்ந்து 39-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். சாம் கரன் 74-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago