இந்திய அணிக்கு தோனி எப்படி இருந்தாரோ அதுபோல, இங்கிலாந்து அணிக்கு இயான் மோர்கன் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் புகழாரம் சூட்டியுள்ளார்.
இங்கிலாந்து டி20 அணிக்கு கேப்டனாக மோர்கன் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இதுவரை 54 போட்டிகளுக்கு தலைமை ஏற்றுள்ள மோர்கன், 31 போட்டிகளில் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். ஐசிசி டி20 தரவரிசையிலும் இங்கிலாந்து அணிதான் முதலிடத்தில் இருக்கிறது. 97 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள மோர்கன், 2,278 ரன்கள் சேர்த்துள்ளார், சராசரியாக 30.37 ரன்கள் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் ஸ்டார் ஸ்போர்ட் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
» டெஸ்ட் தரவரிசை: ரிஷப் பந்த் வாழ்விலேயே சிறந்த ரேங்கிங்: புஜாரா வெளியேற்றம்; கோலி பின்னடைவு
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடர் மோர்கன் தலைமைக்கு சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறேன். இங்கிலாந்து கேப்டனான மோர்கன் நடுவரிசையில் களமிறங்கி அணியை பலப்படுத்தக்கூடியவர், பீல்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படுவார். இந்திய அணிக்கு கேப்டனாகவும், தலைவராகவும் எவ்வாறு தோனி இருந்தாரோ அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு மோர்கன் இருக்கிறார்.
இங்கிலாந்து அணியில் அதிகமான நன்மதிப்பை மோர்கன் பெற்றுள்ளார், அவருக்கவே வீரர்கள் விளையாடுவார்கள். மோர்கன் எவ்வாறு எடுத்துச் செல்கிறார் என்பதைப் பொறுத்து டி20 தொடர் அமையும் என்று நினைக்கிறேன்.
இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளமாக இருப்பதால், நிச்சயம் டேவிட் மலான் சிறப்பாகச் செயல்படுவார் என நம்புகிறேன். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக நன்றாக மலான் விளையாடக்கூடியவர், வலிமையான வீரர், ஆப்ஃசைடில் நன்றாக விளையாடக்கூடியவர்.
டி20 போட்டியில் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்ற மைதானமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், மலான் இந்திய மைதானத்தில் நன்றாக விளையாடுவார் என நினைக்கிறேன். இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமானவை. கடந்த 2 ஆண்டுகளாக மலான் விளையாடுவதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
இவ்வாறு ஸ்வான் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago