சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஏற்கெனவே டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திலும், ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்திலும் இருக்கும் இந்திய அணி டி20 தரவரிசையிலும் முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு கிட்டியுள்ளது. வரும் 12-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றினால் முதலிடத்துக்கு முன்னேறும்.
தற்போது இங்கிலாந்து அணி 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி 268 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியைக் கீழே இறக்க இந்திய அணிக்கு இன்னும் 7 புள்ளிகள் மட்டுமே தேவைப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றால் இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறும்.
ஆஸ்திரேலியாவுக்கும், நியூஸிலாந்துக்கும் இடையே நடந்த டி20 தொடரை நியூஸிலாந்து 3-2 என்ற கணக்கில் வென்றது. இதனால் ஆஸ்திரேலிய அணி தரவரிசையில் 2-வது இடத்திலிருந்து 3-வது இடத்துக்குச் சரிந்துவிட்டது. தற்போது இந்திய அணியின் புள்ளிகளைவிட ஒரு புள்ளி குறைவாக 267 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. பாகிஸ்தான் 260 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூஸிலாந்து 253 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.
» தவண் பெஞ்ச்சில் உட்காரட்டும்; ரோஹித், கே.எல்.ராகுலைத் தேர்வு செய்யுங்கள்: விவிஎஸ் லட்சுமண் அறிவுரை
» இங்கி. டி20 தொடர்: இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் பங்கேற்பதில் சிக்கல்?
வீரர்களுக்கான தரவரிசையில், நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் 830 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
2-வது இடத்திலிருந்த இந்திய வீரர் கே.எல்.ராகுல் 816 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 697 புள்ளிகளுடன் தொடர்ந்து 6-வது இடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து கேப்டன் மோர்கன் 10-வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக ஆடியதன் மூலம் நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 681 புள்ளிகளுடன் 8-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் வரிசையிலும், ஆல்ரவுண்டரிகள் வரிசையிலும் டாப் 10 வரிசையில் எந்த இந்திய வீரர்களும் இல்லை. பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் முதலிடத்திலும், ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி முதலிடத்திலும் உள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago