தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், இந்திய அணிச் சேர்க்கை, ஸ்பின் பந்து வீச்சு, அணியின் மனோநிலை ஆகியவை பற்றி ரவிசாஸ்திரி தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பேட்டி.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணி பற்றி கருத்து கூறிய இயக்குநர் ரவி சாஸ்திரி, 'இது ஓர் அணி, இதில் தனிநபர்கள் இல்லை' என்றார்.
மேலும், 'இந்த அணி நேர்மையான வீர்ர்களைக் கொண்டது. வெற்றிகளைக் கொண்டாடுகிறார்கள், தோல்வியை கவுரவத்துடன் எதிர்கொள்கின்றனர்' என்றார் அவர்.
செடேஷ்வர் புஜாரா ஒரு ‘நல்ல தலைவலி’, ஆனால் நேசிக்கக் கூடிய இந்த கவலையை தீர்க்க உடனடி மாத்திரை ஏதுமில்லை. சதம் அடித்த ஒருவர் அணியில் இடம்பெறவில்லை எனில் ரவி சாஸ்திரியே அந்த தொடர்ச்சியின்மையை விளக்கியாக வேண்டும் என்று கூறுகிறார் ரவி.
“அணியில் ஒரு சமநிலை ஏற்பட என்ன செய்ய முடியுமோ அதனைச் செய்கிறோம். இலங்கையில் காயப்பிரச்சினைகள் இருந்தது, புஜாராவுக்கு தொடக்க வீரராகக் களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அவரும் அதனை சிறப்பாக பற்றிக் கொண்டார்.
தன்னுடைய நிலையைத் தக்கவைக்க அணியில் போட்டி இருப்பது நல்லது. ஆரோக்கியமான போட்டி இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு நல்லது. சதம் எடுப்பவர் கூட தனது இடத்தை முயன்றே பெற முடியும் என்ற நிலை நல்லதே.
இந்த அணியில் ஒருவர் மீது ஒருவர் பழி போடும் பழக்கம் இல்லை. இதுதான் அணியின் உண்மையான பலம். மேலும் இங்கு தனி நபர் இல்லை. இது ஒரு அணி. இந்திய அணி செயல்பாங்குடன் திகழ்கிறது. ஆஸ்திரேலியாவில் எந்த ஒரு இந்திய அணியும் கடைசி தொடரில் ஆடியது போல் ஆடியதில்லை. தொடரை 2-0 என்று இழந்தோம், ஆனால் கொடுக்கப்பட்ட கிரிக்கெட்டின் தரம் என்னவென்பதை நான் நினைத்துப் பார்க்க வேண்டும்.
பிறகு இலங்கையில் வென்றோம், 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி இந்த இளம் இந்திய அணியின் மூலம் சாத்தியமானது. பல மகான் வீரர்கள் இலங்கையில் ஆடியுள்ளனர், ஆனால் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. இந்த அணியின் சராசரி வயது 25. இது முன்னேற்றத்துக்கான அறிகுறி.
தென் ஆப்பிரிக்க தொடர் பற்றி..
தென் ஆப்பிரிக்க தொடருக்குத் தயாராகவே இருக்கிறோம். இது பற்றி எந்த வித கேள்விக்கும் இடமில்லை. இது மிகவும் சவாலான ஒரு தொடராக அமையும். கடந்த 7-8 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய டெஸ்ட் தொடராகும் இது.
கடந்த 7 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்கா தோற்காத அணியாக உள்ளது. இந்த ஒரு உண்மைக்காக அந்த அணியை நாம் மதித்தேயாக வேண்டும். இந்திய அணியும் தனது ஆகிருதியில் வளர்ந்துள்ளது. எனவே நிரூபிக்க இதுவே சரியான தருணம்.
தென் ஆப்பிரிக்காவை ஆதிக்கம் செலுத்த இந்த அணிக்கு இதுவே சரியான தருணம்.
டி20, ஒருநாள் தொடர் தோல்வி பற்றி...
இரு தொடர்களும் நெருக்கமானவை. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல முறையில் ஆடுவோம். உலகத் தரம் வாய்ந்த அணி நம்மிடம் உள்ளது. கடினமான சூழ்நிலையை எப்படிக் கையாள்வது என்பதில் ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சி உள்ளது. அணியில் சமநிலை இருந்தால், ஆவேசமான கிரிக்கெட்டை விளையாட சரியாக இருக்கும். ஒரேயொரு கவலை உள்ளதாகக் கூற வேண்டுமென்றால் அது 7-ம் நிலை பற்றியது.
அந்த இடத்தில் உள்நாடாக இருக்கும் போது சுழற்பந்து வீசுபவராகவும் பேட்டிங் செய்பவராகவும் இருந்தால் நல்லது. எந்த ஒரு தருணத்திலும் 5 பேட்ஸ்மென், 5 பவுலர் அணிச் சேர்க்கையையே நான் விரும்புவேன், இப்போதைக்கு ஸ்டூவர்ட் பின்னி அந்த இடத்தை நிரப்புகிறார்.
ஸ்பின் பந்து வீச்சில் தெரிவுகள் இல்லாதது போல் தெரிகிறதே?
அப்படி நான் நினைக்கவில்லை. அஸ்வின் அவரது உச்சத்தில் உள்ளார், அமித் மிஸ்ராவும் ஒரு மேட்ச்-வின்னர் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் நெருங்கியிருக்கிறார். ரவீந்திர ஜடேஜா புத்துணர்வுடன் மீண்டும் வந்துள்ளார்.
ஜெயந்த் யாதவ் என்பவர் வளர்ந்து வருகிறார். தொடர்ந்து இவர் ஒவ்வொரு போட்டியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறார். வேகப்பந்து வீச்சுதான் பெரிய கவலை.
பெருந்தன்மை தேவையில்லை:
நமது பலம் ஸ்பின் என்றால், அந்தப் பாணிக்கு பொருந்தும் பிட்ச்களை இடுவதுதான் சிறந்தது, அப்படியே செய்ய வேண்டும். அது மெதுவாகவும் பந்துகள் திரும்புவதுமாக இருந்தால் அது அப்படித்தான். எதிரணியினருக்குச் சாதகமாக பிட்ச்களை தயாரிக்கும் பெருந்தன்மை தேவையில்லை.
இருதரப்பு கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவின் விளையாட்டு ஆச்சரியமளிக்கக் கூடியது. அந்த அணியில் ஆழம் உள்ளது. ஸ்பின்னில் குறைபாடு உள்ளது. ஆனால் வேகப்பந்தைக் கொண்டு அதனை பதிலீடு செய்து விடுகின்றனர். கொஞ்சம் கூடுதல்-குறைவாக அந்த அணி உள்ளது. எதிர்காலத்தில் வெற்றிடம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன."
இவ்வாறு கூறினார் ரவி சாஸ்திரி.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago