நாளை மறுநாள் மொஹாலியில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் துணைக் கண்ட பிட்ச்களில் வெற்றிகரமாக திகழ என்னென்ன உத்திகள் கையாளப்படும் என்று டேல் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார்.
"இங்கு நான் செய்த முக்கியமான விஷயம் என்னவெனில் வேகத்தில் சமரசம் இல்லை என்பதே. காற்றில் பந்தை வேகமாக வீசுவது இப்பகுதிகளில் முக்கியமானது. 135 கிமீ வேகம் கூட பேட்ஸ்மென்கள் சுலபமாக எதிர்கொள்ளக்கூடியதுதான், ஆனால் மணிக்கு 145 பிளஸ் வேகத்தில் வீசி பந்தின் தையலை தரையில் பட்டு எகிறுமாறு வீசும்போது பேட்ஸ்மென்களுக்கு நேரம் இருக்காது. ஆனால் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்ய வேண்டியது அவசியம்.
இது மட்டும் போதாது. வேகப்பந்து வீச்சாளர்கள் மீதான அச்சம், பேட்ஸ்மென்களை தவறு செய்ய தூண்டும். சில சமயங்களில் துல்லியமாக வீசும் பவுலர்கள் மீது எரிச்சல் ஏற்பட்டு தவறுகள் இழைக்கப்படுவதுண்டு. இவை தவிர இன்னொரு திட்டத்தையும் ஒரு பவுலர் கைவசம் வைத்துக் கொள்வது அவசியம். இது பீல்டர்களை உள்ளடக்குவது.
நாங்கள் நிறைய இது குறித்து முன்கூட்டியே தயாரித்துக் கொள்வோம். யாருக்கு எதிராக விளையாடுகிறோம், அவர்கள் எந்தெந்த இடங்களில் அதிகம் ஆட்டமிழந்துள்ளனர். குறிப்பாக அவர்களது கடந்த 10 இன்னிங்ஸ்களைப் பார்ப்போம். இந்த 10 இன்னிங்ஸ்களில் எப்படி ஆட்டமிழந்துள்ளார்கள், அதில் ஏதாவது ஒரு பாங்கு தெரிகிறதா? என்று பார்ப்போம்.
இது ஒன்றும் ராக்கெட் விஞ்ஞானம் அல்ல. ஆஃப் ஸ்டம்புக்கு மேலே வீசுவதோடு அவ்வப்போது திடீர் பவுன்சர் இதுதான் ஜாக் காலிஸ் அடிக்கடி கூறும் உபாயம். சச்சினுக்கு ஆஃப் ஸ்டம்புக்கு மேலே வீசினால் அவர் பாயிண்ட்டில் அடிப்பார், முரளி விஜய்க்கு அதே பந்து கவர் திசையில் அடிப்பதாக அமையும். அதனால் உங்கள் பீல்டர் எங்கு நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்பது முக்கியம். ஒரே பந்துக்கு பல்வேறு பேட்ஸ்மென்கள் பல்வேறு விதமான ஷாட்களை ஆடுவர்.
கடைசி 10 இன்னிங்ஸ்களில் ஒருவர் அதிகமாக ஷார்ட் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருந்தால், அங்கு பீல்டரை நிற்கச் செய்வதன் மூலம் ‘உன் பலவீனம் எனக்குத் தெரியும்’ என்பதை அவருக்கு சூசகமாக தெரிவிப்பதாகும். இவ்வாறு அவுட் ஆனால் நான் அவரை நோக்கி சிரிப்பேன்.
ஒருநாள் போட்டிகளில் முதலில் விளையாடியதால் நான் டெஸ்ட் போட்டிகளுக்கான நல்ல நிலையில் இருக்கிறேன். பொதுவாக இந்திய மைதானங்களில் வீசுவது எனக்குப் பிடிக்கும், மைதானங்கள் தட்டையாக இருக்கும், தென் ஆப்பிரிக்கா போல் ஒரு முனையில் ஏதோ மலைமீது ஏறி ஓடுவது போல் இங்கு இருக்காது, பிட்சில் பவுன்ஸ் இல்லாவிட்டாலும் நன்றாக ஓடி வந்து வீசுவதற்கான ஒரு நல்ல உணர்வை இந்திய மைதானங்கள் கொடுக்கும்.
அதனால் காலையிலும் பிறகு மாலையில் ஆட்டம் முடியும் தறுவாயிலும் கூட நல்ல வேகமாக வீச முடியும்.
இவ்வாறு கூறினார் டேல் ஸ்டெய்ன்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
13 hours ago
விளையாட்டு
19 hours ago
விளையாட்டு
20 hours ago
விளையாட்டு
22 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago