16 வயது வில்வித்தை வீரரான பிரகதி சவுத்ரி, மூளை முடக்குவாதத்தில் இருந்து மீண்டு, தற்போது உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
வில் வித்தை வீரரான பிரகதி கேலோ இந்தியா வெற்றியாளர். இவர் கடந்த ஆண்டு மே மாதம் திடீரென மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த அவருக்குப் பல்வேறு உள்ளங்களின் உதவியுடன் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. 2 மாதங்களுக்குப் பிறகு எழுந்து நடக்க ஆரம்பித்தார் பிரகதி. அதற்குமே அவர் பிஸியோதெரபி செய்ய வேண்டி இருந்தது.
மீண்டும் வில் வித்தை பயிற்சியைத் தொடரக் கடுமையாக உழைத்தார் பிரகதி. இதற்கிடையே நேற்று உலகக் கோப்பை வில் வித்தை போட்டிக்குத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற தேசிய சோதனைத் தேர்வில் பிரகதி 3-வது இடம் பிடித்தார். இதன் மூலம் இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார்.
குவாட்டமாலாவில் அடுத்த மாதம் உலகக் கோப்பை வில் வித்தை போட்டி நடைபெறுகிறது. ஷாங்காயில் மே மாதமும் பாரிஸில் ஜூன் மாதமும் அடுத்தடுத்த உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறுகின்றன. மூன்றில் இரண்டு உலகக் கோப்பைகளில் பிரகதி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
21 hours ago
விளையாட்டு
23 hours ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
4 days ago
விளையாட்டு
5 days ago