சென்னை வந்தார் தோனி; விறுவிறுப்பாகத் தயாராகும் சிஎஸ்கே: 9ம் தேதி பயிற்சி தொடக்கம்

By பிடிஐ


2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் டி20 போட்டிக்குத் தயாராகும் வகையில் சிஎஸ்கே அணி வரும் 9-ம் தேதி முதல் சென்னையில் பயிற்சியைத் தொடங்க உள்ளது.

இதில் பங்கேற்க சிஎஸ்கே கேப்டன் தோனி நேற்று இரவு சென்னை வந்து, 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

2021-ம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டி ஏப்ரல், மே மாதம் நடைபெற உள்ளது. அதற்காக தயாராகும் பணியில் ஒவ்வொரு அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த முறை சிஎஸ்கே அணி, சூப்பர் லீக் சுற்றுகூட செல்லாமல் வெளியேறியது.

ஆனால் இந்த முறை மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் தீர்மானத்துடன் உள்ளது. அதற்காகத்தான் முதல் அணியாக சிஎஸ்கேஅணி பயிற்சியை தொடங்கஉள்ளது. வரும் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி, நேற்று இரவு சென்னை வந்தடைந்தார்.

சிஎஸ்கே கேப்டன் தோனியின் வருகையைக் குறிப்பிட்டு சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்தில் " தலை-வா! முகக்கவசத்துடன் புன்னகை. சூப்பர் நைட்" என்று தெரிவித்துள்ளது. மேலும், டென்கம்மிங், விசில்போடு,யெல்லோவ் எனும் ஹேஸ்டேக்குகளையும் பதிவிட்டுள்ளது.
சிஎஸ்கே அணியின் அதிரடி ஆட்டக்காரர் அம்பதி ராயுடுவும் நேற்று இரவு சென்னை வந்துவிட்டார்.

வரும் 9-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பயிற்சியில் தோனி, அம்பதி ராயுடு உள்ளிட்ட அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பயிற்சி தொடங்கும் முன் சென்னை வந்த வீரர்கள் அனைவரும் 5 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த தனிமைப்படுத்தும் காலத்தில் கரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் நெகட்டிவ் வந்தபின்தான் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த முறை சிஎஸ்கே ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலி, கர்நாடக ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம்,சத்தேஸ்வர் புஜாரா, தமிழக வீரர் ஹரி நிசாந்த், ஹரிசங்கர் ரெட்டி, பகத்வர்மா ஆகியோர் வாங்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

17 hours ago

விளையாட்டு

18 hours ago

விளையாட்டு

22 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

மேலும்