விராட் கோலி என்றால், கிரிக்கெட் மட்டும்தான். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டும்தான் அவரின் சாதனைத் தடம் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், கிரிக்கெட்டையும் தாண்டி கோலியின் சாதனை நீண்டுள்ளது.
இந்திய அளவிலும், உலக அளவிலும் இன்ஸ்டாகிராமில் 10 கோடி ஃபாலோயர்ஸைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் எனும் பெருமையை விராட் கோலி பெற்றார்.
ஐசிசி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பாராட்டுச் செய்தியில், "இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட முதல் கிரிக்கெட் வீரர் 32 வயதான இளம் வீரர் விராட் கோலி" எனத் தெரிவித்துள்ளது
இதன் மூலம் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட சர்வதேச பிரபலங்கள் வரிசையில் விராட் கோலியும் இணைந்தார். விராட் கோலிக்கு ஃபேஸ்புக்கில் 3.60 கோடி பின்தொடர்பவர்களும், ட்விட்டரில் 40.80 கோடி பேரும் இருக்கின்றனர்.
உலக அளவில் இன்ஸ்டாகிராமில் அதிகமான ஃபாலோயர்ஸை போர்ச்சுகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வைத்துள்ளார். ரொனால்டோவுக்கு 26.60 கோடி பாலோயர்ஸ் உள்ளனர். அதைத் தொடர்ந்து, புகழ்பெற்ற பாடகர் அரியானா கிராண்டேவை 22.40 கோடி பேரும், டபிள்யு டபிள்யுஇ சூப்பர்ஸ்டார் தி ராக் ஜான்ஸனை 22 கோடி பேரும் பின்தொடர்கின்றனர். மெஸ்ஸிக்கு 18.70 கோடி ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
மேலும், நெய்மர், லயோனல் மெஸ்ஸி ஆகியோரின் வரிசையில் விராட் கோலியும் 10 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட பிரபலமாக இணைந்தார்.
விராட் கோலிக்கு அடுத்தாற்போல் இந்தியாவில் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டவராக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளார். பிரியங்காவுக்கு 6 கோடி ஃபாலோயர்ஸ் உள்ளனர்.
251 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 12,040 ரன்களும், 90 டெஸ்ட் போட்டிகளில் 7,490 ரன்களும், 85 டி20 போட்டிகளில் 2,928 ரன்களும் சேர்த்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
40 mins ago
விளையாட்டு
6 hours ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
1 day ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
2 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago
விளையாட்டு
3 days ago