அட.. நான் கிரிக்கெட் வீரரானதே தற்செயலானது: 400 விக்கெட் எடுத்தபோது மகிழ்ச்சியா?- அஸ்வின் கலகலப்பு

By ஏஎன்ஐ

நான் கிரிக்கெட் வீரராக மாறியதே தற்செயலானது. நான் உண்மையில் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன், அதனால்தான் என்னவோ கிரிக்கெட் வீரராக மாறிவிட்டேன். இப்போது என் கனவில்தான் வாழ்ந்து வருகிறேன். இந்திய அணியின் ஜெர்ஸியை அணிவேன் என நினைத்துக்கூடப் பார்த்ததில்லை என்று இந்திய அணி வீரரும், தமிழக வீரருமான ரவிச்சந்திர அஸ்வின் சுவாரஸ்யமாகத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை எடுத்து முதல் வீரர், உலக அளவில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது சுழற்பந்துவீச்சாளர், உலக அளவில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது வீரர் எனும் பெருமையைத் தன்னகத்தை வைத்துள்ள தமிழர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

தமிழகத்திலிருந்து எண்ணற்ற வீரர்கள் கிரிக்கெட் உலகில் தடம் பதித்துள்ளார்கள். நான் குறிப்பிட்ட அளவுக்குச் சாதனை படைத்தவர்கள் யாரும் இல்லை என்பதை உறுதியாகக் கூறலாம். ஆனால், தமிழக வீரர் அஸ்வின் அனைத்தையும் போக்கும் விதமாக அவரின் 400 விக்கெட் சாதனை நிலைத்து நிற்கும்.

பிசிசிஐ இணையதளத்தில் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதருடன் ரவிச்சந்திரன் அஸ்வின் கலந்துரையாடியுள்ளார்.

அதில் அஸ்வின் கூறியதாவது:

''ஆஸ்திரேலியப் பயணத்துக்குச் செல்லும் முன், அதிலும் அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு முன் தொடர்ந்து 8 மணி நேரம் நான் பழைய கிரிக்கெட் வீடியோக்களைப் பார்த்தேன். இப்படி நான் பார்த்ததால், என்னால் பந்துவீச்சில் வித்தியாசமாகத் திட்டமிட முடிந்தது.

எதற்காக இப்படி தொடர்ந்து பார்த்தேன் என எனக்குத் தெரியாது. ஆனால், எதையும் சாதகமாக மாற்ற வேண்டும் என்று மட்டும் எண்ணினேன். ஆஸ்திரேலிய வீரர்கள், ஆடுகளங்கள், ஆகியவை பற்றி அறிந்துகொள்ள ஏராளமான வீடியோக்களைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன்.

அதிலும் கரோனா லாக்டவுன் காலத்தில், நான் வீட்டில் இருந்தபோது, ஏராளமான பழைய கிரிக்கெட் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்தேன். அதிலும் குறிப்பாக சேப்பாக்கத்தில் சச்சின் சதம் அடித்த வீடியோ உள்ளிட்ட பல வீடியோக்களை ரசித்துப் பார்த்தேன்.

முதலில் சிறந்த வீடியோக்களை மட்டும்தான் பார்த்தேன். ஆனால், ஏன் சிறந்த வீடியோக்களை மட்டும் தேடிப்பார்க்க வேண்டும், எல்லாவற்றையும் ஏன் பார்க்கக் கூடாது என எனக்குத் தோன்றி ஏராளமான வீடியோக்களைப் பார்க்கத் தொடங்கினேன்.

நான் பார்க்கத் தொடங்கியபின் இப்போது எனக்கு வேடிக்கையாக இருந்தது. ஏனென்றால், களத்தில் பேட்ஸ்மேனுக்கு பந்துவீசப் போகும் முன், அடுத்து பேட்ஸ்மேன் என்ன செய்வார், என்ன மாதிரியான ஷாட் அடிக்கப் போகிறார் என்று என்னால் ஊகித்து அதற்கு ஏற்றாற்போல் பந்துவீச முடிந்தது.

400 விக்கெட்டுகளை எடுத்த அன்று மகிழ்ச்சி அடைந்தேனா எனக் கேட்கிறீர்கள். உண்மையைச் சொல்லவா... 400 விக்கெட் எடுத்த அன்று இந்திய அணிக்குக் கடுமையான நெருக்கடி இருந்தது. இங்கிலாந்து அணியை விட முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள்தான் முன்னணி வைத்திருக்கிறோம்.

இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிற்கவிட்டால் ஆபத்து என்பதால், கடும் நெருக்கடியில், அழுத்தத்தில் இருந்ததால், எனக்கு எந்த உணர்வும் இல்லை. டிஆர்எஸ் முடிவு எடுத்தபோதுதான் நான் 400 விக்கெட் எடுத்த உணர்வே எனக்கு வந்தது. 400 விக்கெட் எடுத்துவிட்டதாக, ஸ்கோர் போர்டில் தெரிவித்தவுடன், அரங்கில் இருந்த ரசிகர்கள் எழுந்து கைதட்டினர். அப்போதுதான் பார்த்தேன். அந்தத் தருணத்தில் நான் என்ன உணர்ந்தேன் என்பதை வெறும் விரல்களை உயர்த்திச் சொல்ல முடியாது.

நான் கிரிக்கெட் வீரராக வந்ததே தற்செயலானது. நான் உண்மையில் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். அதன்பின்தான் கிரிக்கெட் வீரராக மாறினேன். என்னுடைய கனவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்திய அணியின் ஜெர்ஸியை அணிவேன், அணிக்காக விளையாடுவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. யார் ஒரு விளையாட்டை அதிகமாக விரும்புகிறார்களோ அவர்கள் அந்த விளையாட்டை விளையாடுவதுதான் சிறந்தது.

ஒவ்வொரு முறையும் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருக்கும்போதும், அவ்வாறு இருந்துவிட்டால், நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாகவே இருப்பேன். இந்தக் கரோனா காலம் எனக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருந்து, என்னை இந்தியாவுக்காக விளையாட வைத்துள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்தபின் நான் அணிக்குள் செல்வேன் என நினைக்கவில்லை, ஆஸ்திரேலியாவில் விளையாடுவேன் என நினைக்கவில்லை. அதனால்தான் சொல்கிறேன். இது எனக்குக் கிடைத்த பரிசு. நான் இந்த விளையாட்டின் மீது அன்பு செலுத்தும்போது அது எனக்குத் திருப்பிக் கொடுக்கிறது''.

இவ்வாறு அஸ்வின் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

20 hours ago

விளையாட்டு

23 hours ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்