நலிவுற்றோருக்கு என்னால் இயன்றதைச் செய்து வருகிறேன்: சச்சின் டெண்டுல்கர் சிறப்புப் பேட்டி

By ஜி.விஸ்வநாத்

சச்சின் டெண்டுல்கர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை, சமூகப் பணிகள், கிரிக்கெட், குடும்ப வாழ்க்கை, பொழுதுபோக்கு, மும்பை நகரம் ஆகியவை பற்றி விரிவாக பேசியுள்ளார்.

இதில் அப்னாலயா உள்ளிட்ட அறக்கட்டளைகளுடன் இணைந்து சச்சின் டெண்டுல்கர் நிறைய சமூகப் பணிகளுக்கு உதவி புரிந்து வருகிறார். இது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த சச்சின் டெண்டுல்கர், “நலிவுற்றோர் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்த நான் எப்பவுமே முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன், இதற்காக என்னால் முடிந்த வரையில், முடிந்த வழிகளில் உதவிகள் புரிந்து வருகிறேன், ஆசையைப் பூர்த்தி செய்த குழந்தையின் சிரிப்பு, சூரியன் மறைந்த பிறகும் விளக்கொளி கிடைத்த பிறகு பெண்ணிடம் ஏற்படும் மகிழ்ச்சி எனக்கு மன நிறைவைத் தருகிறது.

மும்பையின் மிக மோசமான குடிசைப் பகுதிகளில் அப்னாலயா பணியாற்றி வருகிறது. அங்கு வீடுகளுக்கு கைவிளக்குகள் வழங்குவதன் மூலம் மகிழ்ச்சியைப் பரப்பி வருகிறது,

இவையெல்லாம் சிறிய முயற்சிகளே. ஆனால் என் இருதயத்துக்கு நெருக்கமானது. இதற்காக நான் எனது சிறிய பங்களிப்பைச் செய்து வருகிறேன். மேலும் சில விஷயங்களையும் அவ்வப்போது அங்கு செய்து வருகிறோம்.

என்னுடைய வாழ்வின் முதல் இன்னிங்ஸில் அதிக நேரம் கிடைக்கவில்லை. இப்போது ஓய்வு பெற்று விட்டேன். எனவே மக்களுக்காக என்னால் முடிந்ததைச் செய்ய முனைந்துள்ளேன். இவர்கள்தான் என்னிடம் அதிக நேசத்தை என் வாழ்நாள் முழுதும் காட்டியவர்கள். கிராமம் ஒன்றைத் தத்தெடுப்பது இத்தகைய தருணத்தின் ஒரு நிகழ்வே.

கிராமம் என்றால் நாம் உத்திரவாதமாக அங்கு இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் அங்கு இருப்பதில்லை என்பதே உண்மை. குறிப்பாக அடிப்படை உள்கட்டமைப்புகள் இல்லை. எனவே பிரதமர் சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா அறிவித்தவுடன் இதற்கு ஏதாவது செய்ய முடியும் என்று கருதினேன். கிராமம் மட்டுமல்ல நகரத்தில் இருப்பதால் நாம் மின்சார உத்திரவாதம் பெற்றுள்ளோம், ஆனால் கிராமத்தில் அவ்வாறு அல்ல. கிராமம் ஒன்றில் ஒரு மின்விளக்கு என்பதன் மதிப்பு அவர்களிடத்தில் ஏற்படுத்தும் தாக்கம் நாம் அறிந்திருக்க முடியாத ஒன்று.

குறைந்த அளவாயினும் இந்த இடைவெளியை பூர்த்தி செய்ய முயற்சி செய்கிறோம். மகிழ்ச்சியை பரவலாக்க வேண்டும். எனவே சூரிய விளக்குகளை வழங்கி வருகிறோம். இத்தகைய சிறு சிறு விஷயங்கள் மெதுவே வித்தியாசத்தை ஏற்படுத்தும். எனவே இதற்காக எதிர்காலத்திலும் என்னால் நிறைய செய்ய முடியும் என்றே கருதுகிறேன், என்றார் சச்சின் டெண்டுல்கர்.

பேட்டியின் சில பகுதிகளிலிருந்து..

பிடித்த ஆண் மற்றும் பெண் பாடகர்:

கிஷோர் குமார், மொகமது ரஃபி, லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே.

அர்ஜுன் டெண்டுல்கரின் கிரிக்கெட் எதிர்காலம் பற்றி... பவுலரா, பேட்ஸ்மெனா?

அர்ஜுன் என்னவாக வருவார் என்பது பற்றி எதிர்பார்ப்பது சரியல்ல. அர்ஜுன் தற்போது இருக்கும் வயதில் பெற்றோரோ அல்லது வேறொருவரோ அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது.

கிரிக்கெட்டை அவர் தனது ஆட்டமாக தேர்ந்தெடுத்திருப்பதால் நான் அது பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதால், அவரது கேள்விகளுக்கு நான் என்னுடைய அறிவுக்கெட்டிய வகையில் சில நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டு வருகிறேன். இருவரும் நீண்ட நேரம் கிரிக்கெட் பற்றி பேசுவோம். ஆனால் நான் அவருக்கு அழுத்தம் கொடுப்பதில்லை. அவர் தனது கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடுவது சிறந்தது. அவர் தன்னால் சிறந்தவற்றை செய்ய முடியும் போது அவர் என்னவாக விரும்புகிறார் என்பது அவருடைய தெரிவு. எனவே பேட்ஸ்மெனா, அல்லது இடது கை வேகப்பந்து வீச்சாளரா என்பது முற்றிலும் அவரது விருப்பமே.

பிங்க் பந்து கிரிக்கெட் பற்றி..

நான் இன்னும் பிங்க் பந்தில் ஆடவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் புதிய பரிசோதனைகளை நான் முற்றிலும் ஆதரிப்பவன். எனவே இதனை முயற்சி செய்து பார்க்க வேண்டும். மாலை வேளைகளில் பிங்க் நிறப்பந்து எப்படி செயலாற்றுகிறது என்பது சில போட்டிகள் ஆடினால் தெரியும். சில மைதானங்களில் விளக்கொளியில் டெஸ்ட் போட்டி என்பது நிச்சயம் வித்தியாசமான சூழ்நிலையை உருவாக்கும்.

தற்போதைய இந்திய பேட்டிங் வரிசையான விஜய், தவன், புஜாரா, விராட், ரோஹித், அஜிங்கிய பற்றி...

இவர்கள்தான் இந்திய அணியின் எதிர்காலம். இவர்களிடத்தில் பெரிய திறமைகள் உள்ளன. வயதும் அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. நீண்ட காலம் இவர்கள் இணைந்து ஆடுவர் என்று நினைக்கிறேன். அஜிங்கிய ரஹானேயை எனக்கு நீண்டகாலமாக தெரியும். அவரது பணி ஒழுங்கை நான் பாராட்டுவேன். அவர் அர்ப்பணிப்புள்ள ஒரு கிரிக்கெட் வீரர், இவரது வளர்ச்சி அபரிமிதமானது. சாதிக்கக் கூடிய இளம் வரிசை நம்மிடையே உள்ளது.

கடைசியாக லோக்கல் ரயிலில் எப்போது பயணித்தீர்கள்?

6 ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லி-டெஹ்ராடூன் இடையே ரயிலில் பயணம் செய்தேன். 1988க்குப் பிறகு மும்பை உள்ளூர் ரயிலில் பயணித்ததில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

விளையாட்டு

28 mins ago

விளையாட்டு

15 hours ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

மேலும்