ஓய்வா...? மீண்டும் கிறிஸ் கெயில்: 2 ஆண்டுகளுக்குப் பின் மே.இ.தீவுகள் டி20 அணியில் இடம் 

By பிடிஐ

அதிரடி பேட்ஸ்மேன், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இடம் பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நடைபெறும் டி20 தொடரில் கிறிஸ் கெயில், டுவைன் பிராவோ, 39 வயதான வேகப்பந்துவீச்சாளர் பிடல் எட்வர்ட்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 3-ம் தேதி தொடங்குகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்தார். அதற்கு முன்னதாக, 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டி உலகக்கோப்பை போட்டி முடிந்தவுடன் ஓய்வுபெறப் போவதாக கெயில் அறிவித்திருந்தார்.

இதற்கிடையே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இன்னும் தான் 2 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிவிட்டுதான் ஓய்வு பற்றிச் சிந்திப்பேன் என கெயில் தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில் ஐபிஎல் டி20 போட்டியிலும், பாகிஸ்தான் டி20 லீக்கிலும் கிறிஸ் கெயில் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்ததையடுத்து, அவரை 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மே.இ.தீவுகள் அணியில் நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.

மார்ச் 3-ம் தேதி இலங்கைக்கும், மே.இ.தீவுகள் அணிக்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது. இதில் 2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கெயில் தனது சொந்த அணிக்காகக் களமிறங்க உள்ளார்.

மேலும், மே.இ.தீவுகள் அணியில் மூத்த வேகப்பந்துவீச்சாளர் 39 வயதான பிடல் எட்வார்டஸும் ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்குப் பின் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் டி20 உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டிக்குத் தயாராகும் வகையில், மே.இ.தீவுகள் தயாராகி வருகிறது.

மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரோஜர் ஹார்பர் விடுத்த அறிக்கையில் " இந்தியாவின் ஐபிஎல் டி20 தொடரிலும், பாகிஸ்தான் டி20 லீக் தொடரிலும் கிறிஸ் கெயில் சிறப்பாக விளையாடியதை அடுத்து, அவர் அணிக்குள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக அணியைத் தயார்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான வாய்ப்பாக இதை அவருக்கு வழங்குகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தவிர ஆப் ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர், அகேல் ஹோசைன் ஆகியோரும் அணிக்குள் அறிமுகமாகின்றனர்.

இலங்கைக்கு எதிரான டி20 தொடர் முடிந்தபின், மார்ச் 10 முதல் 14-ம் தேதிவரை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆன்டிகுவாவில் நடக்கிறது.

மே.இ.தீவுகள் டி20 அணி விவரம்:

நிகோலஸ் பூரன், பொலார்ட் (கேப்டன்), பேயன் ஆலன், டுவைன் பிராவோ, பிடல் எட்வார்ட்ஸ, ஆன்ட்ரூ பிளெட்சர், கிறிஸ் கெயில், ஜேஸன் ஹோல்டர், அகில் ஹோசைன், இவான் லூயிஸ், ஓபெட் மெக்காய், ரோவ்மென் பாவெல், லிண்டல் சிம்மன்ஸ், கெவின் சின்க்ளேர்.

ஒருநாள் அணி விவரம்:

கெய்ரன் பொலார்ட் (கேப்டன்), ஷாய் ஹோப், பேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஜேஸன் ஹோல்டர், அகீல் ஹோசைன், அல்சாரி ஜோஸப், இவான் லூயிஸ், கெயில் மேயர்ஸ், ஜேஸன் முகமது,நிகோலஸ், பூரன், ரோமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

1 day ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

2 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

3 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

4 days ago

விளையாட்டு

5 days ago

மேலும்